****தமிழன்டா தமிழன்டா****

****தமிழன்டா தமிழன்டா****
தமிழினம் அழிக்க வந்த கூட்டம்...
தலைவிரித்தாடுது இங்கு ஓர் ஆட்டம்...
மரணத்தின் விளிம்பிலதமிழனின் போராட்டம்...
தடையினனை உடைத்திட இளைஞரின் பேரோட்டம்...

வேதனை ஒன்றே தமிழன் சொந்தம்...
சோதனை ஒன்றே பெருமுதலையின் எண்ணம்...
கண்ணீர் மட்டும் தமிழனின் சொந்தம்...
கலங்கப்படுத்துவது கடவுளின் சித்தம்...
கடவுளின் சித்தம் உடைத்துக்காட்டுவோம்,,,
உலகிற்கு தமிழனின் பெருமை ஏற்றுவோம்,,,
விவேகம் ஒன்றே தமிழனின் பெருமை,
எதிர்பைக் கையாளத் தெரிந்தது தமிழனின் பொறுமை...
தமிழனின் பொறுமை தலைகுனியாது,
தடையினை உடைத்து உன் தலை சாய்த்திடும் பாரு...
பாருக்குள் உன்னை விட்டது யாரு...
உன்னை மண்ணுக்கு அனுப்ப,
தமிழன் நிமிர்ந்துட்டான் பாரு...
இனி தலை நிமிர்ந்திட உன் தலை இருக்காது...
தஞ்சம் புகுந்திட இனி இடமிருக்காது...
இன்றே மூட்டைக்கட்டு கட்டிடு, இல்லை
முடக்கப்படும் இனி உன் தளர்ச்சியை பாரு.....

தமிழ்ததாயின் பிள்ளைகள் நாம்
துணிந்திடுவோம்
எழுந்திடுவோம்
கரம் கோர்ப்போம்,
களத்தில் நிற்போம்,
புதியதோர் உலகம் செய்வோம்....

எழுதியவர் : நாகராஜ் மு (22-Apr-18, 10:46 am)
சேர்த்தது : மு நாகராஜ்
பார்வை : 162

மேலே