அன்னைத்தமிழ்
தமிழாழ் பற்றி
தமிழாள் உரைத்தாள்
தமிழால்...!
என் அன்னை(...த்) தமிழே
உலகின் முதன்மொழியாம்..!
அதற்க்கு
தரணியெங்கும் புகழொலியாம்...
தத்துவங்களின் பிறப்பிடமாம்;
தன்னிகரற்ற சிறப்பிடமாம்;
தங்கத் தமிழே
இனிமையின் வசிப்பிடமாம்..!
செந்தமிழின் சுவையது நாவினிலே...!
செவியெல்லாம் மயங்குது
கேட்கையிலே...!
திங்களது திகைக்குது
அதன் வடிவினிலே...!
தென்குமரி திளைக்குது
பெறும் பெருமையிலே...!
உள்ளமெல்லாம் உருகுது இலக்கியத்தில்...!
உடலெல்லாம் சிலிர்க்குது
இலக்கணத்தில்...!
கவிதைகள் ததும்புது காவியத்தில்...!
கதையெல்லாம் தெரியுது ஓவியத்தில்...!
சிற்சில வரிகளில்
செந்தமிழ் கவிகள்...!
பற்பல மொழிகளால்
விரும்பிடும் வரிகள்...!
அந்நிய மொழிகளும்
ஆசைகொள்ளும் என்
அன்னைத்தமிழ் அவளின் இனிமையிலே...!!!