சில பவழமல்லிப் பூக்கள்

அருச்சனைத் தட்டுடன் ஆலயம் சென்றேன்
ஆலயவாசல் கோபுரத்தை அண்ணாந்து பார்த்து தரிசித்தேன்
அந்த ஆலயக் கோபுர அழகை ரசித்துப் பார்த்திருந்தேன்
அருச்சனை மறந்து சிற்ப அழகு சிந்தனையில் திரும்பிவிட்டேன்
ஆலய வாசலுக்கு மீண்டும் சென்றேன் ;ஆலயக் கதவு சாத்தப்பட்டிருந்தது
ஆலயக் கோபுரத்தை மீண்டும் அண்ணாந்து பார்த்தேன்
இறைவர்கள் எல்லாம் அகம் மகிழ்ந்தனரோ கருணை கொண்டனரோ
அருகிலிருந்த பாரிஜாத மரம் காற்றில் அசைய
என் அருச்சனைத் தட்டில் சில பவழமல்லிப் பூக்கள் !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Apr-18, 8:51 am)
பார்வை : 75

மேலே