எங்கே தேடுவது
எங்கே என் சொந்தங்களை தேடுவது
எங்கே என் உடன் பிறப்புக்களை தேடுவது
வலிகள் சுமந்த தாயையும்
மரத்தடி வேரான தந்தையையும்
கதறி அழுதாலும் கண்ணில் காட்டுவரோ...?
எறிகணை வீச்சில் என்காலும் போனது
என் சொந்த நாட்டிற்கு போனதாக இருக்கட்டும்
இரண்டு வருசம்
மின்சார வசதியுடன் வீதிகளும்
கல் வீடுகளுடன் மேற்படி மேல்மாடி வீடுகளும்
ஆனால்
என் ஒற்றை கால்
போரின் வடுவாகத்தான் இருக்கிறது
இன்று
என் பெயர் மறைந்து
காலில்லாதவன் என்ற பெயரே
என்னுடன் ஒட்டியிருக்கிறது