அழகோ அழகு

மண்ணிலே பயிரின் பசுமை
மனதிலே விதைத்தாள் பதுமை
வண்டுகள் உலவும் கண்கள்
வசீகரம் பிழியும் கன்னம்
பெண்ணின அழகு யாவையும்
பெற்றவள் சிற்பமாய் நின்றாள்
உண்ணவும் ருசிக்கவும் நெஞ்சம்
உறுதியாய் எண்ணும் தினுசாய்க்
கண்டதும் கவர்ந்தாள் நெஞ்சில்
காதலை வளர்த்தாள் மறைந்தாள்
அஷ்ரப் அலி