சுய போஸ்வெல்

ஆத்திகம் பேசியாச்சு
நாத்திகம் பேசியாச்சு
கட்சி கட்சியாய் தாவி
கொள்கை பரப்பியாச்சு
இப்பொழுது வேலை இல்லை
பேசக் கூப்பிட ஆளில்லை
என்ன செய்யலாம் ?
பேச்சின் சுயசரிதை
எழுதுகிறான் சுய போஸ்வெல் !

எழுதியவர் : கவின் சாரலன் (23-Apr-18, 9:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 390

மேலே