ரோசாப்பூ செண்டு
காதலில் ஊடலெனும்
சூறாவளி வீசி
காதலர் மனதை
வலியால் சிதைத்து விடும்போது,
மனதிற்கு இதம் அளிப்பது
ரோசாப்பூ செண்டு;'
காதலன், ஊடலை மறந்து
மீண்டும் காதலுக்கு
புத்துயிர்த் தந்திட
காதலிக்கு அனுப்பும்
பூ மடல், இந்த ரோசா செண்டு,
பிரிந்தவரை பிணைக்கும்
அரு மருந்து , காதல் வலிக்கு
அறிய சஞ்சீவினி.