ஆசை அமுதே ,,,

முற்றுப் பெறாத சொற்களாய் என்னுள் அவள் ,,,,

வெளிச்சம் படாத விதைகளாய் நெஞ்சில் அவள் ,,,,

தண்ணீர் இல்லா கிணற்றினுள் தத்தளிக்கும் என் மனதை

எட்டி பிடிக்க எண்ணுகிறேன் எனோ என்னால் இயலவில்லை ,,,,

அவள் சொற்களின் புதையலில் சிக்கி கொண்ட

என்னை மீட்க எனோ இன்னும் இயலவில்லை ,,,,

அவள் நெற்றி ஓர முடியை விட்டு

நீந்தி செல்ல முயன்று முயன்று மூழ்கி தானே போகிறேன்

அவள் மூச்சு காற்றில் கரைகிறேன் ,,,,

என் கரைந்து போன மூச்சு காற்றும்

அவளை சென்று தொட்டு வந்து

கூட கொஞ்சம் சத்தம் போட்டு கூட்டுகிறது ஊரையே ,,,,

நிஜத்தாலும் நினைவாலும் நொறுக்கு கின்ற அரக்கியே

உன் விரல்களின் பரிசத்தால் வீழ்ந்து போகிறேன்

உன் விழிகளின் பரிசத்தால் சாய்ந்து போகிறேன் ,,,,

நிலவே நீல வேனியே கள்ளச் சிரிப்பினில் காதலை சொல்லாதே ,,,,

சண்டை முடிவினில் அன்பை தெளிக்காதே ,,,,

குட்டி குட்டி ஊடல் கொண்ட காதல்

என்றும் வேணும் ஆசை அமுதே ...

எழுதியவர் : பா.தமிழரசன் (24-Apr-18, 10:39 am)
பார்வை : 157

மேலே