புத்தகம்

விசயங்களால் என் புத்தியை உறைய வைத்தாய். வியப்புகளால் என் விழியை விரிய வைத்தாய்.உன்னைப் புரட்டிப் பார்த்ததற்கே என் தந்தை என்னை விரட்டி அடித்திருக்கிறார் (osho book) கைகளில் ஒழித்து வைக்க முடியாத போதெல்லாம் உன்னை என் கண்களில் ஒழித்து வைத்திருந்திருக்கிறேன் உன்னை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு உறங்கிய காலங்கள் எல்லாம் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை.எத்தனை எத்தனை காதலர்களை எனக்கு அறிமுகம் செய்தாய்.ஆம் என்னையே எனக்கு
அறிமுகம் செய்த விசித்திரப் பொருள் நீ.தனிமையில் எனக்கு துணையாகவும் இனிமையில் எனக்கு இனையாகவும் இருந்தது நீ மட்டும் தான்,என் அறிவுக்கு தீனி தந்து அறியாமைப் பிணி நீக்கிய அரிய மருத்துவன் நீ. கடைகளில் அடுக்கி வைத்த உன்னை என் கைகளில் இடுக்கி வைத்துக்கொள்ள எத்தனை முறை ஏங்கியுள்ளேன்,நான் உன்னை வாசிப்பவள் அல்ல சுவாசிப்பவள்.

எழுதியவர் : அழகி (24-Apr-18, 11:23 am)
Tanglish : puththagam
பார்வை : 105

மேலே