என் இதயம் நீ தானே

ஆறி ராரி ஆறி றாரா
கண்மணியே கண்ணுறங்கு
கலங்காம நீ உறங்கு
பொன்மணியே கண்ணுறங்கு
பொன் மடியில் நீ உறங்கு
மண்ணாள பிறந்தவளே
மயங்கி நீ கண்ணுறங்கு
ஆறி ராரி ராரி றாரோ
ஆரா ராரி ராரி றாரோ
கண்ணான கண்ணழகே
முத்தான முகத்தழகே
செவ்விதழ் வாய் அழகே
கண்ணுறங்கு கலை மகளே
உன்னை தான் கையில் ஏந்த என்ன தவம் செய்தோமோ
கண்ணுறங்கு செல்ல மகளே
கண்ணுறங்கு செல்வ மகளே
ஆறி ராரி ராரி றாரோ
ஆரா ராரி ராரி றாரோ

எழுதியவர் : Ranith (24-Apr-18, 11:46 am)
பார்வை : 476

மேலே