தருமன் தந்தது

தயங்கிய தருமன்
மயங்கி
சூதாடாமல் விட்டிருந்தால்,
துரியனிடம்
தூதாகச் சென்ற கண்ணன்
வாதாடும் நிலை வந்திருக்காது..

கண்டிருக்கமாட்டோம்
காண்டீபத்தின் மகிமையை,
பார்த்திருக்கமாட்டோம்
பாடம் பல சொன்ன
பாரதப் போரை..

கிடைத்திருக்காது
கீதை என்னும் வேதம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Apr-18, 7:00 am)
பார்வை : 95

மேலே