கட்டில் சுகம்
தூது விடும் கண்கள்
துயில் கொள்ள மறுக்க
தவித்திடும் இதயம்
தனிமையில் கதை பேச ...
தாளிட்ட அறைக்குள் நினைவுகள்
தயக்கமின்றி நுழைந்திட
தடுக்க மனமின்றி -போர்
தொடுக்க தயாரானேன் ...
கட்டில் போர்களமானது
தொட்டில் குழந்தையானேன் -அவன்
சுட்டும் இடமெல்லாம் மெய்சிலிர்த்தேன்
சூட்டிலும் விறைத்து போனேன் ..
வியர்த்த இடமெல்லாம் -அவன்
தாகம் தீர்த்தான்
சுவாரஸ்ய களத்தில்-இருவரும்
சுவை தேட தொடங்கினோம் ..
உருமாற்றத்தில் உச்சம்
உடுப்புக்கு விடுப்பளித்தோம்
போரில் களைத்தானவன்
போதையில் மயங்கி நான் ...!!
முகத்தில் தெளித்த நீர்-என்
முகத்திரை அவிழ்த்தது .. -இது
கனவாயினும் அவன்
மீண்டும் வர துயில்கிறேன் ...!!!