ஏன் இன்னும் தாமதம்

நீ எங்குதான் சென்றாய் ?
உன் பூமியில் ஏதாவது
அலை அடித்ததா ?
ஏன் இன்னும் தாமதம் ?
கடலுக்குச் சென்றவனைக்
காத்துக் கிடக்கும்
பேதைப் பெண்ணாய்த்
தவிக்கிறது என்மனம்

பெறுமதி வாய்ந்த
பெரிய கடல் மீன்
பொக்கிஷம் போல்
உன் காதலை அவ்வாறே
என்னிடம் இப்போதே
கொண்டு வந்து தந்து விடு...
அதன் ருசியறிய
பசியோடு
ஆவலாய் காத்துக்
கிடக்கிறேன்
உன் பாதம் பதியும்
எனது பாதையை
நோக்கி நோக்கி .....

அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (26-Apr-18, 1:03 pm)
பார்வை : 373

மேலே