காதல் பிறந்தது
எதுவும் வேண்டாம் எனக்கு
குடிக்கவோ,உண்ணவோ!
தந்தாள் தன் பார்வையை
என் மனம் நிரம்ப!நிரம்ப!
ஏங்கிய மண்ணுக்கு மேகம்
மழையை தந்ததுபோல!
சிரிக்கிறேன்!
துள்ளிக் குதிக்கிறேன்
ஆடுகிறேன்!பாடுகிறேன்!
நெஞ்சின்மீது கைவைத்து
தாளம் போடுகிறேன்!
கைகளை விரித்து
கண்களை மூடி வீசும்
தென்றலை சுவாசிக்கிறேன்!
உயிரே!உணர்வே!சகியே!
என் நெஞ்சில் பாயும் நதியே
உளமாற நேசிக்கிறேன் உனையே!
என் மனமோ காத்திருந்தது!
எதுவுன் மனக்கதவை
உடைத்தது!
காலம் கனிந்தது நம்
காதல் பிறந்தது
அத்தருணம் வாழ்வில் சிறந்தது!