வாழ்வு ஓர் காற்றாடி

காற்று வீசும் வானில்
காற்றாடி இவன்
தரையிலிருந்து மாஞ்சா
தோய்த்த நூல் கொண்டு
இப்படியும் அப்படியும்
அசைக்க, அசைக்க
துள்ளி குதித்து
ஒய்யாரமாய் ஓர்
நடனமாது போல் ஆடியது
காற்று நின்றது
அங்கு வானில் பாவம்
மூச்சுவிட முடியாது
தவித்தது , கீழிருந்து இவன்
'நோயாளிக்கு' அளிக்கும்
'வெண்டிலேட்டர்'போல்
நூல்கொண்டு காற்றாடியை
நிலை நிறுத்தப் பார்க்க
முடியாது போக
தரை நோக்கி வீழ்ந்தது
மூச்சு திணறிய காற்றாடி
ஜீவ ராசிகள் வாழ்வும்
இப்படித்தான், மண்ணிருந்து
நீர், நெருப்பும் இருந்து
வானிருந்து, அதில்
காற்று இல்லாமல் போக
தரை இறங்கிய காற்றாடிபோல்
அற்றுப்போகும் ஜீவனற்று.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (29-Apr-18, 7:16 am)
Tanglish : vaazvu or kaatraadi
பார்வை : 121

மேலே