அன்பின் அனுபவம்

அன்பு என்பது சும்மா வார்த்தை அலங்காரம் அல்ல, பதிவில் மட்டும் உபயோகப்படுத்த.

அன்பென்பது வாழ்க்கை. அங்கு புரிதல் பிறக்கும்.
கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை.

நீங்கள் சொல்வது உண்மையா?
கஷ்டமில்லாத வாழ்க்கை வாழ்வது சாத்தியமா? என்று நீங்கள் கேட்கிறீர்கள்.

உண்மையில் சாத்தியமாகும்.
உண்மையில் அன்பு கொண்டவர்களோடு வாழ்ந்தால் புரியும்.
வாழ்க்கையில் நேரப்போக்கு என்பது எதுவுமில்லை.
அன்பைத் துணையாகக் கொண்டால் வாழ்க்கைக் கழிவதே தெரியாது.
ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சிகரமாக நகரும்.

அன்பின் அடையாளம் கேட்டால் சொல்வேன் தன்னால் யாரும் கஷ்டப்படக் கூடாது என்ற மனோபாவம்.
இந்த மனோபாவம் கொண்ட இரண்ட அன்பான மனங்கள் ஒன்றாக வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணி பாருங்கள்...

கடவுள் இருக்கிறான், இல்லை என்ற விவாதமெல்லாம் மறந்திடுங்கள்.
அன்பை நினைத்திடுங்கள்.
அன்பால் எழும் வார்த்தைகள் சாபங்கள் அல்ல.
அவை அன்பின் மொழிகள் உணர்ந்து கொண்டால் மனம் மாறிவிடும்.
அன்போடு சேர்ந்திடும்.
அன்பை உணர்ந்த மனதை அடுத்தவர் மனதைக் காயப்படுத்த இயலாது.
தன்னை அறியாது காயப்படுத்தினாலும் காயப்பட்ட மனதை விட தானே அதிக வலியை அனுபவிக்கும்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (28-Apr-18, 7:59 pm)
Tanglish : anbin anupavam
பார்வை : 2504

மேலே