பாடல் -கங்கைமணி

(கிராமத்தில் நடக்கும் பொங்கல் பண்டிகையைப்பற்றியும் மற்றும் அந்த ஊரின் தெய்வங்களைப்பற்றியும் ,ஊரைப்பற்றியும் சொல்லிவருகிறது இப்பாடல்.எனது நண்பர் ஒருவரின் ஊரில் நடக்கும் திருவிழாவிற்காக எழுதப்பட்டது.இன்னும் சில தினங்களில் இசையோடு வெளிவரவுள்ளது.நமது நண்பர்களின் பார்வைக்காக பதிவிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.இப்பாடலில் உள்ள குறை நிறைகளை எடுத்துரைத்தாள் மகிழ்வேன் நன்றி)



ஊரு கூடி ஒறவு கூடி
ஒத்துமையா பொங்கவைச்சோம்.
இனிமே துயரேது...,
இனி நமக்கு இதுதான் வரலாறு !

தெய்வமருளும் .. முன்னோர்னருளும்
ஒண்ணுசேர்ந்து பொங்கிவருது .,
இனிமே பயமேது ...,
இனி நமக்கு எல்லாம் ஜெயம்பாரு !

(ஊரு கூடி ஒறவு கூடி …,)

செங்கோட்டையில கொலுவிருக்கு
நாலுதெய்வந்தான்..,அத நீ !
கொண்டு நோக்கு
குலத்தகாக்கும் காவல்தெய்வந்தான் !

யானைமுக நாயகன வேண்டிக்கொல்லுறோம் ,அவரு
தொட்டதெல்லாம் துளங்கிவச்சார் நன்றிசொல்லுறோம் .

இது வெங்கடாச்சலப்பெருமாள் மண்ணு பாருங்க ,எங்க
மூச்சுக்காத்து கலந்திருக்கு இதுலதானுங்க !

வளத்துருவம் கேட்டு போனா ?!வெற்றி கிடைக்குது
வாழ்ந்த மண்ணெடுத்து இட்டுப்போனா வம்சம் தழைக்கிது !.

பொங்கவைச்சு பூசசெஞ்சா பூமி விளையுது ,நாங்க
படையல்வச்சு வேண்டிநின்னா வானம் பொழியுது!.

வாழும் ஊருக்குள்ள எங்களுக்கினி
வருத்தம் ஏதுமில்ல!
வணங்கும் தெய்வமெல்லாம்
வரங்கொடுத்து வாழ்த்துச்சொன்னதுல !

(ஊரு கூடி ஒறவு கூடி …,)

பொங்கிவருது
பெருகிவருது
மலர்ந்துவருது
மகிழ்ந்துவருது
தங்கு தடைய
உடைச்சு வருது
பான பொங்கித்தான்!

துர்க்கையம்மன்
சுழற்றி எறிஞ்ச
சூலம் வருது
சுழன்று வருது
வான் மழையா
திரண்டுவருது
ஊரு நிறையத்தான் !

சாட்ட எடுத்து சுழற்றிவருது
கருப்பன் குதிரைதான் ,சனமே
விழுந்து வணங்கி மோட்சம் பெறுது
கண்ணு எதிரதான்!.

ஆலமரம் நிழலப்போல ஐயனாருதான், அந்த
நிழலுக்குள்ள குடியிருக்கு எங்கஊருதான்

சேமங்குதிர கண்திறந்து பவனிவருகுது , அய்யன்
கோட்டையில குடிபுகுந்து ஆசிவழங்குது !

பறவைகளா ஒண்ணுசேர்ந்து கூடிவாழுறோம் ,படைச்ச
கடவுளுக்கும் பந்திவைச்சு பகிர்ந்து உண்ணுறோம்!

மூனு நாளு விழா ,
எங்கமனசு போகும் வானில் உலா !
காணி கரைகளெல்லாம் ,
காத்துவைக்க எடுத்தோம் இந்தவிழா !
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (30-Apr-18, 7:25 pm)
பார்வை : 71

மேலே