உழைப்பாளிக்கு மகுடம் சூட்டுவோம்
வளைந்த முதுகும் நிமிர்ந்தே சொல்லிடும்/
விளைந்த வயலில் வியர்வை மின்னிடும்/
உயர்ந்த கட்டிடம் உவகைத் தந்திடும்/
உழைப்பின் மேன்மையை உரக்கச் சொல்லிடும்/
உழைக்கத் தெரிந்தவன் மனித சாதி/
பிழைக்கத் தெரியாத இனத்தின் ஏமாளி/
உழைப்பாளி உயரத் தோள் கொடுத்திடு/
களிப்போடு வாழ வழிச் செய்திடு/
வேர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்/
நாளைய உலகை இனிதே ஆளட்டும்.