இளமையில் கல் என்பது கள் என்று பிழையாய் ஒலிக்கவிபரீதம் -சிரிக்க,சிந்திக்க

ஒரு டாஸ்மாக் கடையின் வாசலில்
, ஒரு பதினைந்து வயது சிறுவன்
கடை திறக்க காத்திருக்கிறான், அந்த வழியே
போன பெரியவர் ஒருவர் இதைப்பார்த்து , , ippஅவனை
அறிந்தவர் அவர், கேட்கிறார், " ஏண்டா பயலே சோமு
என்ன உன் அப்பனுக்கு இதனனை அதிகாலைல
கிக் தேவையா, போ, போ, வீட்டுக்கு, படிக்கற
காலை வேலையை வீணாக்காதே....................


சோமு : தாத்தா, நான் என் அப்பனுக்கு வரல
எனக்கு வந்திருக்கேன்.............கள்
குடிக்க...................

தாத்தா : என்னடா சொல்லற, புரிஞ்சுதான்
சொல்லறீயா, போக்கத்தவனே....
(கோவிக்க)
சோமு : தாத்தா, ஸ்கூல் ல சொன்னாங்க
இளமையில்' கள்' ..............என்று
அதான் தாத்தா முதல்ல வந்து
நிக்கறேன்.

தாத்தா: அப்பனுக்கு ஏத்த பையன் ............டேய் சோமு
அது, இளமையில்' கல்' டா.....அப்படினா
சிறுவயதிலேயே படிக்க கத்துக்க.
பாடங்கள் படிக்க என்று அர்த்தம்..........
புரியுதா.................
சோமு : சரி தாத்தா ( சிரிச்சிக்கறான்
மனசுக்குள்ள).............

( இது யார் குற்றம்- 'கல்' ஐ 'கள்' என்று உச்சரித்த
பள்ளி யா இல்லை அதை விஷமத்தனத்துடன்
சாதகமாக்கிக்கொள்ளும் இந்த பையனா
அவன் பெற்றோரா............இது ஒரு நிஜ சம்பவம்)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-May-18, 6:01 am)
பார்வை : 227

சிறந்த நகைச்சுவைகள்

மேலே