காதலுக்கு சோதனை
வழக்கம்போல் இன்றும் அவன்
எனக்காக ஒரு ரோசா பூச்செண்டு
கையில் ஏந்தி தெருவோரம்
ஆளில்லா இடம் பார்த்து காத்திருந்தான்
என் இதயத்தில் வீரம் வரவழைத்து இவனை
நான் இன்று விடப்போவதில்லை என்று
தீர்மானத்தோடு , நேரே நெருங்கினேன்
அவனை கண்ணோடு கண் நோக்க
கேட்டுவிட்டேன்,' சரி உன்னோடு காதல்
கொள்ள யோசிப்பேன், ஆனால்
அதற்கு முன்னாள் நீ எனக்கோர்
சத்தியம் செய்து கொடுப்பாயா ,
'இனி இந்த உந்தன் கண்களிரண்டால்
என்னைத்தவிர வேறோர் பெண்ணை
தவறியும் பார்க்கமாட்டேன் என்று' ,
கேட்ட மாரு வினாடி அவன் மாயமாய்
மறைந்துவிட்டான் காற்றோடு
அப்பா அவன் இனி எனக்கு துன்பம்
தரமாட்டான் இனிமேல் என்று நினைத்து
என் வழியே போய்விட்டேன் நான்.