மறுபடி தலைப்பை படிக்கவும்
யென்னையேன் எப்போதும்
விசாரிக்கின்றீர் தவறாது...
உங்கள் உண்டியலை
துளாவுகையில் முதலில்
நான் விழுந்ததற்கு...
கழன்றோடும் பட்டனை
தேடிப்பிடிக்கையில்
தேள் கொட்டியதற்கு...
பேருந்துப்பயணத்தில்
உங்கள் மீது மட்டும்
சிசுவொன்று கக்கியதற்கு...
நடைபயிற்சியில்
பேனா தொலைந்து
மூடியுடன் வீடு வந்ததற்கு...
விசாரிக்கின்றீர் என்னையே.
எவரும் அறியாது
நீங்கள் எழுதிய
பெரும் நாவலில்
போர் குறிப்புகளையும்
தந்திரங்களையும்
எனது வியர்வை
அருந்திப்போனது
எனது தவறல்ல...
மறைத்துக்கொண்டு
போகுமென்னை முறைக்கும்
உங்கள் கொடுக்கின்
வலுவினை நீங்கள்
நம்பவில்லையெனில்
எழுதிய நாவலில்
மறுபடி தலைப்பை படிக்கவும்.