புதிய டைரி

சொல்ல முடிந்ததை
சொல்லி மனம் ஆறலாம்
சொல்ல முடியாததை
புதிய டைரியே கூறலாம்
நிகழக் காத்திருக்கும்
புதியப் புதிய நிகழ்வுகள்
ஒவ்வொன்றும் நம்மை
புகழவும் செய்கிறது
மகிழவும் செய்கிறது
நெகிழவும் செய்கிறது
அழுகவும் செய்கிறது
நன்மையோ தீமையோ
இலாபமோ நஷ்டமோ
தயவோ தடையோ
குறிப்பெழுதும் டைரி
தவறினை திருத்திக் கொண்டிட சரிறியினை நிலைக்கச் செய்திட
குறிப்பெழுதும் கையேடாய்
விளங்கிடும் புதிய டைரி
பிறப்பை இறப்பை
உழைப்பை இழப்பை
எழுதப்படிக்க புத்தி தெளியும் கழுத்திற்கு கத்தியும் அதுவே
எசக்கு பிசக்கு கணக்கு
எழுத காட்டிக் கொடுத்து கம்பி
எண்ண வைக்கும் அதுவே
நேர் வழி என்றும் எழுந்து
நிமிர்ந்து நிற்கும் மாற்று
வழி என்றும் மறைத்திடவே
நினைக்கும்
இடம் மாறினும் கக்கத்தை
விட்டு விலகாது சிலருக்கு
தடம் மாறிவிடில் கண்கள்
உறங்காது சிலருக்கு
நண்பரும் பகைவரும்
வெளியில் இல்லை மாறாக
உனக்குள்ளே அடையாளம்
காட்டிடும் புதிய டைரி
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
" புதிய டைரி "
கவிதைமணியில்