பட்டாசு சத்தம்

பட்டாசு சத்தம் பிறரது
தற்பெருமையின் பித்தம்
தொழிலாளரின் இரத்தம்
வணிகர்களின் மொத்தம்
கதறி க்கதறியேக் கத்தும்
நடந்திட்டதின் அபத்தம்
நரகாசுரனை எரித்தோம்
அத்தீ நம்மினத்தை சுட்டதே
பட்டாசு கொளுத்துதற்கு
பதிலாக நாகரிகமாக நாம்
நமது தற்பெருமையினை
நமது ஆடம்பரமதனை
நமது கௌரவமதனை
நமது ஏட்டிக்கு போட்டியை
கொளுத்திப்பார்ப்பமே
பட்டாசு சத்தம் கட்டுப்பட
சீனத்துப் பட்டாசு படுத்து
விட்டது என்பதற்காகவோ
சிவகாசி பட்டாசு எழுந்து
நின்றது என்பதற்காகவோ
பொருக்க வொன்னாமலோ
சதித்திட்டம் தீட்டப்பட்டதோ அன்றி விதியின் விபரீதமோ
உயிர்களை மடித்திட்டதோ
கதறியே ஓலமிட்டு இதயம்
பதறிய காட்சிகள் யாவும்
நெஞ்சைப் பிளந்திட்டனவே
சுமையும் இல்லாமல் ஒரு
வலியும் இல்லாமல் நாம்
நன்நாளில் அமைதியாக
பட்டாசு சத்தம் கேட்போமே
காலங்காலமாக க்காசை
கரியாக்கும் கலாச்சாரம்
விட்டொழியவிட்டு ஞாலம்
அமைதிபெற நம் பங்காக
தூலமாய் நிலைநிறத்தி புது
யுக்தியை வரைவோமே
ஆன்மாக்கள் சாந்திபெற
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
"பட்டாசு சத்தம்"
கவிதைமணியில்