நிலைக்கும் என்றே

வாழ்வு" நிலைக்கும் என்றே" நம்பியிருப்போம் ||
நாம் மூச்சுவிட வரும் காற்றில் ||
இடையிடையே ஏதோ இடையூறின் ||
காரணத்தாலோ வந்த இச்சிறுச்சிறு ||
மூச்சுத் திணரல்களதனைத்
தாங்கிடுவோம் ||
வாழ்வு புகட்டவிருக்கும் பாடமதை ||
ஏற்றிட வில்லை யெனில்
நாம் மனிதரில்லை ||
இன்றில்லை யென்றா லென்னவாம் ||
நாளை நமதாகலாம் என்ற
நம்பிக்கை ||
இழக்கவில்லை வாழ்வு" நிலைக்கும் என்றே" ||
நன்மையென ஆரம்பித்து
தீமையிலும் ||
தீமையென ஆரம்பித்து
நன்மையிலும் ||
முடிவதுண்டு இரண்டிற்கும் நன்றி என்போம் ||
வாழ்வு" நிலைக்கும் என்றே" நம்பியிருப்போம் ||
பசுமைக்கு பால்வார்க்கும்
வானம் காய்ந்தென்ன ||
உழவர்க்கு பால்வார்க்கும்
பசுமை தோய்ந்தென்ன ||
காய்ந்தாலும் தோய்ந்தாலும்
மாயாது ஒருநாளும் ||
பசுமை" நிலைக்கும் என்றே" நம்பியிருப்போம் ||
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
"நிலைக்கும் என்றே"
கவிதைமணியில்