ஒருதலைக் காதல்

இது இன்னும் நமக்குள் மறைந்துள்ளது

அவ்வப்போது நினைவிற்கு வருகிறது

சாலையில் செல்லும் போது

அவளைப் போன்ற

முகத்தையோ குரலையோ சந்தித்தால்

நின்றுவிடுகிறோம் சில விநாடிகள்

யாரோ ஒருத்தி அவளின் சகதோழியை

ஒருதலைக் காதலியின் பெயர் சொல்லி

அழைக்கும்போது

நம் நினைவில் உதிப்பது

ஒருதலைக் காதலியின் முகமே

இணைந்து பிரிந்து போகும்

இருதலைக் காதலை விட

இது சிறந்தது

எனினும் வலிகள் ஏராளம்

எழுதியவர் : நா.கோபால் (3-May-18, 10:40 pm)
Tanglish : oruthalaik kaadhal
பார்வை : 323

மேலே