காதல் வாழ வேண்டும்!!!

நதிக்கரையோரம்
நீயும் நானும்
நம் பயணம் நீண்டதூரம்
நீள வேண்டும்

நம்மை நம் காதல்
ஆள வேண்டும்

இருவர் இதயமும்
அன்பின் காட்டில்
அலைய வேண்டும்

போகும் பாதையெங்கும்
போதை மரங்கள் வேண்டும்...

மரத்தின் மலர்கள் நம் மனதில் உதிர வேண்டும்

உதிரும் பூக்களை மீண்டும் நம் கனவுகள் மரம் கொண்டு சேர்க்க வேண்டும்

சாகும் காலம் வரை
நீயும் நானும் பிரியாதிருக்க வேண்டும்
பிரபஞ்சமே அழிந்தாலும்
...நம் காதல் வாழ வேண்டும்....

எழுதியவர் : இளங்கதிர் யோகி (4-May-18, 1:46 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
பார்வை : 64

மேலே