மறைந்து போன என் நினைவுகள்

என்றோ ஒரு நாள் பிரிவு வரும்
என்று அதற்காக ஒத்திகை
பார்க்கிறாயோ...

வரும் கால நினைவுகள்
ரணமாய் கொள்ளும் என்றே
கடந்த கால நினைவுகளை
அழித்து சென்றாயோ..

மூச்சு காற்று கூட
நம்மை பிரித்து விட கூடாதடி
என்ற உன் சொல்
பொய்யாகி போனதடா ..

என் மூச்சும் பிரிந்து விடுமடா
நீ என்னை பிரிந்து போனால் ...

இரு விழியால் சேர்ந்த நம் காதல்
உன் ஒரு சொல் பிரித்து விட்டதடா ..

என் நெஞ்சத்தில் சேர்த்து வைத்த
காதல் என்னும் மாலையை
ஒரு நொடியில் உதிர்த்து விட்டயாடா

எழுதியவர் : ரோஜா (5-May-18, 12:20 pm)
பார்வை : 411

மேலே