கற்பு

உலகில் இல்லாத ஒன்று
உலகில் பார்க்காத பொருள்

எவனோ சொன்ன புரளி

ஆண்கள் பெண்கள் மீது
சுமத்திய சாபச்சுமை

ஆண்கள்
பெண்க ளை
கட்டிப்போட்ட
கைவிலங்கல்ல உறுப்புவிலங்கு
உடம்பு விலங்கு

திருமண பத்திரத்திரம்எழுதி
வீட்டுக்காவலில் வைத்து
கற்பு சட்டத்துக்குள் வாழும்
"பெயில்" பெறாத
பிரியமான கைதிகள்

எழுதியவர் : பபூதா (5-May-18, 12:36 pm)
சேர்த்தது : பபூதா
Tanglish : karpu
பார்வை : 233

மேலே