காரல் மார்க்ஸ் இன்று கார்ல் மார்க்சின் 200 வது பிறந்தநாள்
வரலாறு அரசியலைப் புணர்ந்து
பொருளாதாரத்தைப் பெற்றடுத்தபோது
அருகிலிருந்து
பிரசவம் பார்த்தவன் நீ!
மூலதனமே எல்லாம்
என்ற வேலையில்
உழைப்பை மூலதனமாக்கிய
முதல் முதலாளி நீ!
குனிந்த இடுப்பு
ஒடிய பாடுப்பட்ட
நல்லுலகில்
பாடுபட்டோர்க்கு
ஒரு பொன்னுலகு
இயற்றிய
நாடககர்த்தா நீ!
கொடுமைதரும் வல்லாட்சி
எடுத்தேன் கவித்தேன்
பிரபுத்துவம்.
தான் தோன்றித் தனத்தின்
சூத்தரதாரிகளாம்
மதவாதிகள்
இவர்கள்
வேரோடு ஒழிய
பட்டாளி மக்களின் வல்லாட்சிக்கு
மத்தளம் கொட்டிட்ட
தீர்க்கதரிசி நீ!
தன் தந்தை உருவம்
புகைப்படமாய்
பார்தறியா
பாமரர்க்கும்
உன் உருவம்
பசு மரத்தாணீயாய்
ஒட்டிய நம்பிக்கை.
சிலர் வாழும் போது
செய்திடுவார் விந்தை
சில காலம் இருந்திடுவார்
உயரவே!
ஆனால் நீ!
இருந்தபோது
மறைந்திருந்தாய்
போன பின்பு
வாழ்கின்றாய்
உலக நாயகனாய்.
பலர்க்கு ஆசை நாயகானாய்.
இன்னும் பலர்க்கு
அதிர்ச்சியூட்டும்
அடித்தொழிக்கும்
கொள்கையாய்.
ஆனாலும்
எராளமானோர்க்கு
நீ உன்னதத் தன்மையின்
ஓரே உருவாய்
வாழ்கின்டறாய் நீ!
அரசியலின் வழிக் கொண்டும்
ஆயுதத்தின் துணைக் கொண்டும்
உன்னை வீழ்த்திட்டாலும்
உலகமயமாக்கலும்
சந்தை பொருளதாரமும்
“எல்லோரும் ஒன்றே”
என்று
உன்னை
குழி தோண்டி
புதைக்க முனைந்திட்டாலும்,
நீ வாழ்கின்றாய்
கோடானுக் கோடிகளின்
அந்தக் கடைக்கோட்டு
கடையர்களின்
நம்பிக்கை நாயகனாய்!
நீ இன்று
உயர்க் கல்வி கூடங்களின்
ஓர் பிரிய நாயகன்
எல்லாவற்றையும், எதனையும்
உன் கண்ணாடி போட்டு பார்க்கும்
அந்த தொலைத்தெடுக்கும்
கூர்நொக்கு பார்வையர்கட்கு,
ஆய்வு நாயகர்க்கு
உள்ளதின் பேராசான் நீ!
ஒரு காலத்தில்
உன்னை படித்தவரை
தொற்றிக் கொண்ட நீ!
அவரின் சிந்தைக்கு
மருந்தாகி
அவரை
சமுதாய மருத்துவராக்கியது
எப்படியோ!