காணாமல் போன சிட்டுக்குருவிக் கூட்டம், அயல் நாடுகளில்

மொட்டை மாடிகளில்
மித்ததில், முற்றத்தில்
சுறு சுறு வத்திப்போல்
தித், தித் என்று ஓயாமல்
சிறு சப்தம் எழுப்பி
சிறு புழுக்கள், வீட்டில்
எறியப்பட்ட தானியங்கள்
இவற்றை உண்டும் அவற்றை
வாயில் எடுத்துக்கொண்டு
தன் கூட்டில் காத்திருக்கும்
குஞ்சுகளுக்கு வாயில் ஊட்டிவிட,
வெகு அழகாய் எடுத்துச்செல்லும்
அந்த சிட்டுக்குருவிகள் கூட்டம்,
இன்றோ ஏனொ காணாமல் போய்விட்டன?
காரணங்கள் எத்தனையோ எடுத்துரைப்பார்
விஞானிகள்- ஆனால் அவற்றிற்கு மேல் ஒரு
காரணம் மனிதனுக்கு மிருகங்கள்
பறவைகள் மேல் பிரியம் அக்கறை இவையும்
பறந்துபோய்விட்டனவே இங்கு நம் நாட்டில்!

ஆஸ்திரேலியாவில் தற்போது வாழும் நான்
நகரங்கள் அத்தனையிலும் சிட்டுக் குருவிகள்
தெருவெல்லாம் வளையவருவதைக் கண்ணாரக்
கண்டேன்; பக்கத்து தேசம் நியூசிலாந்து,அங்கும்
அவற்றைக்கண்டு ரசித்தேன்-இந்த தேசங்களில்
விஞான வளர்ச்சிக்கு என்ன குறைபாடு?
ஏதும் இல்லையே; இங்கும் 'நுண்ணலை
கோபுரங்கள்', 'உயர் பதற்ற மின்சக்தி' கம்பங்கள்
ஏராளம், ஏராளம், இருந்தும் சிட்டுக்குருவிகள்
கட்டுப்பாடின்றி கூட்டம் கூட்டமாய்
திரிந்து,பறந்து வளம் வருவதை
கண்ணார பார்த்து மகிழ்ந்தேன்,சிறு
தானியங்கள் அவற்றிக்கு தந்து மகிழ்ந்தேன்.

காக்கை கூட்டங்களைக் கண்டு ஆனந்தம்
அடைந்த மஹாகவி, அதன் சிறகுகளில்
'நந்தலாலாவைக்கண்டான்',குருவிகளுக்கு
அரிசி,நெல் தந்து மகிழ்ந்தான்............பாடினான்

இன்று நாம் மனித நேயம் குன்றி வாகின்றோம்
பறவைக்கும், விலங்குக்கு நம்மிடம்
நேயம் ... ? வெட்கம்,வெட்கம்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-May-18, 3:58 am)
பார்வை : 84

மேலே