விலை நிலங்கள், காடுகள் அழிப்பது குற்றம்

பசுமைப்பொங்கும் கிராமங்கள்
பசும்சோலைகள் தோட்டங்கள்
வயல் வெளிகள் இவையெல்லாம்
போயேபோய் , மக்கள் புதுவாழ்விற்கு
வந்து சேருகிறது நகரத்தின் நீட்டிப்பு
புதுப் புது 'கான்க்ரீட் கட்டிடங்கள்'
மக்கட் தொகைப் பெருகும்போது
நகரங்களை நீடித்தால் தான்
மக்கள் வாழ முடியும் என்பது சரிதான்
ஆனால் அதற்கென்று வளநிலங்கள்
வனங்கள் இவைகளை அழிப்பது சரி இல்லை
இதை கருத்தில் வைக்கவேண்டும் காவலர்கள்
இன்று வேகமாய் வளர்ந்துவரும்
'மலை வாழ்' பகுதிகள் , சுற்றலாவைக்
கருத்தில்கொண்டு வேகமாய்
விரிவடைய, வேகமாய் அழிக்கப்படுவது
காடுகள், சொற்ப விளைநிலங்கள் ,அத்துடன்
அழிபவை, வனஜீவன்கள்,மலைவாழ்
மக்கள், கலாசாரம், சுற்றுசூழ்நிலை என்பன
இவற்றை எல்லாம் தெரிந்தும் தெரியாதுபோல்
தொடர்ந்து அழிப்பது குற்றம் ஆனால் இவற்றை
குறைப்பது யார் செய்வார்............

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (6-May-18, 3:13 am)
பார்வை : 71

மேலே