வானம் பாா்த்த பூமி
வயலோடும் வரப்போடும்
சேற்றோடும் நாற்றோடும்
நான் விளையாடித் திாிகிறேன்
கால் நனைக்கும் வயல்வெளிகள்
வால் முளைக்கச் செய்கிறது
தோள் நனைக்கும் தூரலும்
யாழிசைத்துக் செல்கிறது
என் தேகம் மட்டும் தகிக்கிறது
தாகத்தில் தவிக்கிறது
வறண்ட என் நாவோடு
திரண்ட தன் கதிா்களை வீசி மூா்க்கமாய் என்னை தாக்கி நிகழ்காலத்தை நினைவுபடுத்துகிறான்
அனலைக் கக்கிக்கொண்டு ஆதவன்..
வாயைப்பிளந்து கொண்டு வானத்தைப் பாா்த்துக் கொண்டிருக்கிறது
தாயைப்பிாிந்திருக்கும் பிள்ளையாய் பூமி..
நானும் வேதனையோடு காத்திருக்கிறேன்
வேரை வெட்டிவிட்டு விளைச்சலை எதிா்நோக்கும் ஒருவனைப்போல..