நினைக்கும்

வானம் பார்த்த பூமியின்னு
வக்கனையா சொல்லி வச்சோம்,
வறுமையில வாடும்போது
வாராத சபையோர் போல
வானம் வந்து பார்க்கலையே
வேதனையை தீர்க்கலையே!

மாறாக

மக்களை காக்க எண்ணி
மேகங்கள் ஒன்றுகூடி
முடிவெடுத்து
மனமுவந்து மழை தந்து
மறுபிறவி கொடுத்த மாரியை
மனசு என்றும் நினைக்கும்

எழுதியவர் : கோ. கணபதி. (6-May-18, 12:00 pm)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : ninaikum
பார்வை : 59

மேலே