நீயும் நானும்

அவசர யுகங்கள் நடுவிலே
படப்படப்பின் இடையிலே
வளர்ந்த காதலே!
ஓடும் வாழ்க்கை
ஓய்ந்த கால்கள்
ஓயவில்லை காதல்
ஏமாற்றம் நிறைந்த வாழ்வில்
ஏமாற துடிக்கிறது மனம்
காதலில் மட்டும்
விசிறி இருந்தும்
வீச மனமில்லை
காதலின் விசிறியாய் ஆனபின்
காதலே!
காதலுக்கு
தத்துப்பிள்ளை
நீயும் நானும்!

-மூ.முத்துச்செல்வி

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (6-May-18, 6:25 pm)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : neeyum naanum
பார்வை : 373

மேலே