காதலியே

இருளாய் இருந்த என் உலகத்தில்
நிலவு ஒளியாய் வந்தவள் நீ
வெறும் மேகமாய் இருந்த என் வானத்தில்
நட்சத்திர பூக்களாய் பூத்தவள் நீ
வெயிலின் தீயில் கருகிய என்னை
உன் கருவிழியின் நிழலில் காப்பாற்றியவள் நீ
தென்றலாய் திரிந்து கொண்டிருந்த என்னை
உன் மூச்சுக்காற்றாய் சிறைபிடித்தவள் நீ
காதலின் கண்ணீரினால் கரைந்துகொண்டருக்கும் என் உயிரை
உன் உயிருடன் சேர்த்துக்கொண்டவள் நீ
ஓர் உடலில் வாழும் இதய துடிப்புகளாய்
காலம் உள்ள வரையிலும் நாம் இணைந்தே
துடித்துக்கொண்டேருப்போம் என் அன்பே!!!

எழுதியவர் : M Chermalatha (6-May-18, 6:28 pm)
Tanglish : kathaliye
பார்வை : 407

மேலே