நீ போய் விடு என்று சொல்லிய போதும்
உனக்கு தெறியுமா
பெண்ணே!
நிலவொளியை ஒடித்து
ஓர் பாதையில் ஒளிரவும்
செய்வேன் உனக்காக...
சில பொய்கள்
புலர்கிறது
பல கவிதையிலும்
நம் காதலிலும்...
நீர் மட்டும் தராது
ஆழி பெயர்க்கும் முகில்..!
அள்ளியும் குடிக்கும்
நீராவியாய்...
நீள்கின்ற உன் விழிகள்
காதலை தந்து
எனைஅள்ளும்
உன் பார்வையாய்..!
கடல் தின்ற சூரியனின்
முதல் இமை விரிப்பாய்
ஒவ்வொரு விடியலிலும்
உன் விரல் நகத்தில்
பிறை வளையமாய் வாய்ப்பேன்...
அசெளகரியமாய்
கை நீட்டி
அழுது கொண்டு
எனை நோக்காமல்
நீ போய்விடு என்று
சொல்லிய போதும்....