வீரவில்லு ஏரிக் கொலை
இலங்கையின் தென்பகுதியில் ஹம்பன்தோட்ட துறைமுகம் உள்ளது. இங்கிருந்து A2 பெரும் பாதை திசமஹரகமவூடாக வடக்கு நோக்கி வெள்ளவாயவுக்கு செல்கிறது . இந்த பாதையில் திசமஹரகமவில் இருந்து வடக்கே சுமார் 4 மைல் தூரத்தில் A2 பெரும் பாதையில் வீரவில்லு ஏரி அமைந்துள்ளது
பண்டைய ருஹுனு இராச்சியத்தின் கவன்திஸ்ஸ போன்ற மன்னர்கள் 1400 ஏக்கர் பரப்புள்ள இந்த எரியை அமைத்தனர். 17 அடி உயரமுள்ள இந்த ஏரியின் அணை. . 17 உயரமும் சுமார் 9240 அடி நீளமும் உள்ளது . இந்த ஏரியில் ஒரு கொலை நடக்கும் என அந்த ஊர் வாசிகள் எதிர்பார்க்கவில்லை. ஒரு காலத்தில் ஏரியை கட்டும் போது மன்னர்கள் பலி கொடுப்பது வழமை . அனால் இந்த கொலை அந்த ஏரியில் சுமார் 2300 ஆண்டுகளுக்குப் பின் நடந்த கொலை என்றே சொல்லவேண்டும் ஏரியை சுற்றி ஒரு வன பூங்கா. வலவே கங்கா, மெனிக் கங்கா, கிரிந்தி ஓயா, மற்றும் கும்பக்கன் ஓயா ஆகிய நதிகளில் இருந்து இந்த ஏரிக்கு நீர் கிடைக்கிறது.
1956 ஆம் அண்டு ஜனவரி 31 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை கந்தையா, முருகையா ஆகிய இரு அரசாங்க ஊழியர்கள் ஏரி அருகே உள்ள பாதையில் நடந்து போகும்போது மூன்று வயது சிறுமி ஒருத்தி அழுது கொண்டு இருப்பதைக் கண்டார்கள். அவர்கள் இருவரரையும் கண்டவுடன் நீரில் மிதக்கும் ஒரு உடலைக் காட்டி கதறி அழுதாள். அந்த சிறுமி . அவளை சாந்தப் படுத்தியபின். முருகையாவை சிறுமியோடு பாதை ஓரத்தில் நிற்கும்படி சொல்லி, கந்தையா தனது என்ஜினியரிடம் போய் தான் கண்ட காட்சியை பற்றி சொன்னான். அவரும் வந்து உடலை பார்த்தபின் திசமஹரகம போலீக்கு போய் முறையிட்டார். தாமதிக்காது இன்ஸ்பெக்டரும் சில போலீஸ்கார்களும் உடல் மிதந இடத்துக்கு வந்து விசாரணை நடத்திய பின் ஏரியில் மிதக்கும் பெண்ணின் உடலை நீரில் இருந்து எடுத்து, பிரேத பரிசோதனைக்கு திசமஹரகம வைத்திய சாலைக்கு போலீஸ் அனுப்பியது . இறந்த பெண்னுக்கு வயது சுமார் 30 இருக்குமெனவும் நீரில் மூழ்கடிக்க முன்னமே கொலை செய்யபட்டாள் என டாக்டரின் அறிக்கைசொன்னது. இறந்தவளை அடையாளம் காண பத்திரிகையில் இறந்தவரின் படத்தையும் மூன்று வயது சிறுமிபற்றிய விபரத்தையும் போலீஸ் பிரசுரித்தார்ககள்.
****
பெப்ரவரி 1 ஆம் திகதி காலை பிரேதம் கண்டு பிடிக்கப்பட்ட ஏரியில் இருந்து மேற்கே 60 மைல் தூரத்தில் உள்ள ஊரான மாத்தறையில், பபூநோனா என்ற பெண்மணி பேப்பரை வாசித்தபின் இறந்தவள் தன் வீட்டில் ஒரு அறையில் வாடகைக்கு மூன்று வயது மகள் மல்காந்தியோடு நான்கு நாட்கள் வாழ்த 30க்கும் 35க்கும் இடைப்பட்ட வயதுடைய லிலியன் மார்கரெட் பெரேரா என்ற பெண்மணி என்று அடையாளம் கண்டு, திசமஹரகம போலீசுடன் தொடர்பு கொண்டாள்.
விசாரணையின் போது லில்லியன். மாத்தறையிலும் (Matara) டொன்டிராவிலும் (Dondra) சில காலம் இரு வைதியர்களின் டிஸ்பென்சரிகளில் நேர்சாக வேலை செய்து அதன் பின் வேல தேடி வந்து தன வீட்டில் தங்கியதாக பபூநோனா போலீசுக்கு சொன்னாள். மாத்தறையில் டாக்டர் கருனாரத்தினாவின் டிஸ்பென்சரியில் வேலை செய்த காலத்தில் சுகததாச என்ற கொப்பரா வியாபாரி ஒருவனின் அறிமுகம் கிடைத்து அது பின் காதலாக மலர்ந்து என்று லில்லியன் பபூநோனாவுக்கு சொல்லியிருக்கிறாள் . அவர்களுக்கு திருமாணமாகாமலே மல்காந்தி என்ற மகள் பிறந்தாள் என்று விசாரனயின் பொது தெரிய வந்தது . அதுவுமல்லாமல் 1946 இல லில்லியனுக்கு திருமணமாகி ஒரு வருடத்தில் ஒரு மகன் பிறந்தான் என்றும்,, ஆனால் அவரக்ளின் திருமண வாழ்க்கை தொடராமல் லில்லியன் கணவனையும் மகனையும் விட்டு தனித்து வாழ்ந்தாள் திருமணமான சுகததாச, லில்லியனை தன வைப்பாட்டியாக வைத்திருக்கவே விரும்பினான் . அதனால் அவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் பிணக்கு அதிகரித்து .
லில்லியனுக்கு வேலை இல்லை. மகளை பராமரிக்க கையில் போதிய பாணம் இருக்கவில்லை. தன்னுடைய கள்ளக் காதலனிடம் இருந்து பணம் பெறுவது அவளின் நோக்கம் . சுகததாச பணம் படைத்த கொப்பரா வியாபாரி . ஹில்மன் கார் கூட வைத்திருந்தான் அதோடு அரசியல் வாதிகளின் தொடர்பு அவனுக்கு இருந்தது. அதனால் அவனிடம் இருந்து முடிந்தளவு பெரும் தொகை பணத்தை பெரறும் நோக்கத்தோடு லில்லியன் செயல் பட்டாள். பல தடவை சுகததாசாவுக்கும் லில்லியானுகும் ஜீவநாம்சம் பணம் விஷயமாக வாக்குவாதங்கள் ஏற்பட்டது . இனியும் அவளின்
நச்சரிப்பை பொறுக்கமுடியாமல் சுகததாசா ஒரு முடிவுக்கு வந்தான் .
ஜனவரி 30 திங்கட்கிழமை இரவு சிறிசேனா என்பவரின் A40 காரில் முன் சீட்டில் ஆனந்தா என்ற சுகததாசசாவின் டிரைவரும் பின் சீட்டில் சுகததாசசா, லிலியன் மற்றும் அவளின் மகள் மல்காந்தியும் திசமஹரகம நோக்கி பயணித்தார்கள் . ஜனவரி 31 ஆம் திகதி காலை 2.30 மணியளில் திசமஹரகம சந்தியை கார் அடைந்த போது ஆனந்தாவை வெள்ளவாய நோக்கி காரை ஓட்டும் படி சுகததாச சொன்னான் . பின் சீட்டில் மல்காந்தி தூங்கியபடி இருந்தாள். சுகததாசவுக்கு லிலியானுக்கும் இடையே ஆங்கிலத்தில் வாக்குவாதம் நடந்தகொண்டிருந்தது . திடீரென லிலியன் மூச்சு திமிரும் சத்தம் கேட்டு ஆனந்தா திரும்பிப் பார்த்தபோது சுகததாசா தன் கைகளல லிலியனின் கழுத்தை திருகிக்கொண்டு இருந்ததை கண்டான் . பதட்டம் அடைந்த ஆனந்தா காரை நிறுத்தினான். : ரிவோல்வரை ஆனந்தாவுக்கு காட்டி வீரவில்லு ஏரியை நோக்கி செலுத்தும்படி கட்டளை சுகததாசா இட்டான். பயத்தில் அவ்வாறே ஆனந்தா செய்தான். ஏரிபின் கரையை கார் அடைந்தவுடன் காரின் பின் கதவை திறந்து சுகததாசா இறங்கி பேச்சு மூச்சு இல்லாமல் பின் சீட்டில் இருந்த லில்லியனின் உடலை தூக்கி ஏரிக்குள் போட்டான் . இரவில் மிருகங்கள் உலாவும் அந்த எரிக்கரைப் பாதையில் மல்காந்தி என்ற லிலியனுக்கும் அவனுக்கும் பிறந்த மகளை தனியாக தவிக்க விட்டு காரில் ஏறி மாத்தறை நோக்கை ஒட்டும்படி ஆனந்தாவுக்கு சொன்னான்
.பயத்தில் சுகததாசா சொன்னபடி அவனும் செய்தான் . போகும் பொது லிலியனின் ஆடைகளை காட்டில் எறியும்படி சுகததாசா சொன்னான் . மாத்தறையை அடைந்தவுடன் நடந்த கொலையை பற்றி ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று எச்சரித்து சென்றான் சுகததாசா. போலீஸ் விசாரித்தபோது ஆனந்தா நடந்த உண்மையை சொன்னான். சுகததாசாவை போலீஸ் கைது செய்து வழக்கை பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தது . வைத்திய பரிசோதனை அறிக்கையின் படி லில்லியன் கழுத்து நெரித்து குற்றுயிராக ஏரியில் வீசப்பட்டதால், நீரில் மூழ்கி இறந்ததாக சொல்லப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுகததாசாவுக்கு மரண தண்டனை விதித்தார். அப்பீலின் பிறகு. அரசியல் ஆதரவு இருந்ததால் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக மாறியது.
****