காலை முத்தம்

காலைப் பனிமலரின்
குளிர்ச்சியுடன்
என் நெற்றியில்
முத்தம் பதிக்கிறாய்
நீ!
சட்டென
உன்னை என் மார்போடு அணைக்கக்
கரங்களை நீட்டுகிறேன்..
வழக்கம்போல்
வெற்றுக் கரங்களுடன்
நான்!
மீண்டும்
இதயத்தில் நீ !

எழுதியவர் : காஞ்சி கவிதாசன் (12-May-18, 5:40 am)
சேர்த்தது : RAJA A_724
Tanglish : kaalai mutham
பார்வை : 313

மேலே