அம்மா

அகர வரிசயில் அன்னைக்கோர் ஆயிர நாம அர்ச்சனை மலர்களால் ஆராதனை



1 ஓம் அக்கரை என்மேல் அதிகம் உள்ளாய் போற்றி
2 ஓம் அக்கிரம் தன்னை எதிர்ப்பாய் போற்றி
3 ஓம் அகக்கடவுள் ஆனாய் போற்றி
4 ஓம் அகங்காரம் அழிப்பாய் போற்றி
5 ஓம் அகண்ட பரிபூரணமாய் விள்ங்குபவளே போற்றி
6 ஓம் அகண்டம் முழுவதும் நீயே போற்றி
7 ஓம் அகந்தைக் கிழங்கை அழிப்பாய் போற்றி
8 ஓம் அகமகிழ்ச்சி உன்னால் எனக்கே போற்றி
9 ஓம் அகமும்புறமும் நீயே போற்றி
10 ஓம் அகமே மனமே போற்றி
11 ஓம் அகர முதலாய் ஆணாய் போற்றி
12 ஓம் அகவற்பாவால் துதிப்பேன் போற்றி
13 ஓம் அங்கப்பால் தந்தெம்மைக் காத்தாய் போற்றி
14 ஓம் அங்கிங்கெனாதபடி எங்கும் நீயிருப்பாய் போற்றி
15 ஓம் அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொள் போற்றி
16 ஓம் அஞ்சல் எனக்கூறி ஆட்கொள் போற்றி
17 ஓம் அஞ்சனம் தீட்டி மகிழ்வேன் போற்றி
18 ஓம் அஞ்சுக மொழியே போற்றி
19 ஓம் அம்சத்வனியில் உன்னை இசைப்பாடி மகிழ்விப்பேன் போற்றி
20 ஓம் அடிமை வாழ்வதனைத் தகர்த்தருள் போற்றி
21 ஓம் அடியினைப் பற்றித்தொழுவேன் போற்றி
22 ஓம் அடைக்கலம் நீயே போற்றி
23 ஓம் அண்டசராச்சர ஒளியே போற்றி
24 ஓம் அணுகார் தமக்கும் துணையே போற்றி
25 ஓம் அணைத்தென்னைக் காப்பாய் போற்றி
26 ஓம் அணையா விளக்கே போற்றி
27 ஓம் அதர்மம் அளிப்பாய் போற்றி
28 ஓம் அந்தகன் தன்னை விரட்டுவாய் போற்றி
29 ஓம் அனவரதமும் உன்புகழ் பாடித்துதிப்பேன் போற்றி
30 ஓம் அபயம் உந்தன் திருவடி போற்றி
31 ஓம் அம்மா போற்றி
32 ஓம் அமுத நிலவே போற்றி
33 ஓம் அமைதி நிலவச் செய்வாய் போற்றி
34 ஓம் அருகிருந்து காத்தருள்வாய் போற்றி
35 ஓம் அருள் தந்து காப்பாய் போற்றி
36 ஓம் அருள்பெரும் சுடரே போற்றி
37 ஓம் அருள்மழை பொழிவாய் போற்றி
38 ஓம் அருள் மொழி புகல்வாய் போற்றி
39 ஓம் அருள் வடிவே போற்றி
40 ஓம் அருளே போற்றி
41 ஓம் அலைப் பாயும் உள்ளத்திற்கு ஆறுதல் அளிப்பாய் போற்றி
42 ஓம் அவமரியாதைச் செயல்களை பொறுத்தருள் போற்றி
43 ஓம் அழகிய மயிலே போற்றி
44 ஓம் அற்புதமே போற்றி
45 ஓம் அறம் பல புரிவாய் போற்றி
46 ஓம் அறம் பொருள் இன்பவீடு நல்குவாய் போற்றி
47 ஓம் அறியாமை இருள் போக்குவாய் போற்றி
48 ஓம் அன்பின் ஊற்றே போற்றி
49 ஓம் அன்பு தெய்வமே போற்றி
50 ஓம் அனுக்கிரகம் புரிந்து ஆட்கொள்வாய் போற்றி
51 ஓம் அனைத்திலும் நீயே போற்றி
52 ஓம் அனத்தின்ப ஆதாரமே போற்றி
53 ஓம் அனைத்து உயிர்களையும் காத்தருள் போற்றி
54 ஓம் அஷ்ட லஷ்மி வடிவே போற்றி
55 ஓம் ஆகமங்கள் போற்றும் உயர்நிலையே போற்றி
56 ஓம் ஆசைக் கடலில் அகப்படாமல் காப்பாய் போற்றி
57 ஓம் ஆடம்பரம் தன்னை வெறுப்பாய் போற்றி
58 ஓம் ஆண்டருள் புரிவாய் போற்றி
59 ஓம் ஆணவம் அழிப்பாய் போற்றி
60 ஓம் ஆதரித்து அருள்வாய் போற்றி
61 ஓம் ஆதாரம் நீயே போற்றி
62 ஓம் ஆதி அந்தமில்லா அருளே போற்றி
63 ஓம் ஆதி அந்தமே போற்றி
64 ஓம் ஆதி சக்தி வடிவமே போற்றி
65 ஓம் ஆபரணம் சூட்டி மகிழ்வேன் போற்றி
66 ஓம் ஆயிரம் நாமங்கள் உனக்கே போற்றி
67 ஓம் ஆயிரம் பாடல்கள் புனைந்திசைப்பேன் போற்றி
68 ஓம் ஆரபி ராகப் பிரியையே போற்றி
69 ஓம் ஆருயிர் தம்மை காத்தருள்வாய் போற்றி
70 ஓம் ஆரோக்கிய வாழ்வருள்வாய் போற்றி
71 ஓம் ஆலயமாம் என் மனக்கோவிலில் உறைவாய் போற்றி
72 ஓம் ஆறா இன்ப அருளே
73 ஓம் ஆனந்தம் அருள்வாய் போற்றி
74 ஓம் ஆனந்த நிலயமே போற்றி
75 ஓம் ஆனந்த பைரவியே போற்றி
76 ஓம் இக்கட்டு தன்னை போக்குவாய் போற்றி
77 ஓம் இன்னமுத வடிவமே போற்றி
78 ஓம் இன்னலெல்லாம் தீர்ப்பாய் போற்றி
79 ஓம் இன்னிசை ஸ்வரமே போற்றி
80 ஓம் இகழ்வோரையும் காத்தருள் போற்றி
81 ஓம் இகபர சுகம் வேண்டிலேன் போற்றி
82 ஓம் இடுக்கண் வராமல் காப்பாய் போற்றி
83 ஓம் இடுப்பினைக் காத்தருள் தாயே போற்றி
84 ஓம் இடைவிடாமல் உன் புகழ் இசைப்பேன் போற்றி
85 ஓம் இணையற்ற திருவடிகள் பெற்றவளே போற்றி
86 ஓம் இணையற்ற திருவே போற்றி
87 ஓம் இணையடிகள் என் துணையே போற்றி
88 ஓம் இதய மலர் அமர்வாய் போற்றி
89 ஓம் இதயம் தன்னில் நீ என்றும் இருப்பாய் போற்றி
89 ஓம் இமையாய் இருந்து நீ என்றும் காத்தருள் போற்றி
90 ஓம் இயம்புவேன் உன்புகழ் என்றுமே போற்றி
91 ஓம் இரப்போர்க்கு ஈவாய் போற்றி
92 ஓம் இரவா நிலையருள் போற்றி
93 ஓம் இருகண்கள் எப்பொழுதும் காத்தருள் போற்றி
94 ஓம் இறந்து மீண்டும் பிறவா நிலையருள் போற்றி
95 ஓம் இனிய நல் ஊற்றே போற்றி
96 ஓம் ஈன்ற உன் மனம் குளிரச் செய்வாய் போற்றி
97 ஓம் ஈன்றவள் என்னை நீயே போற்றி
98 ஓம் ஈன்றென்னைக் காத்தாய் போற்றி
99 ஓம் ஈஸ்வரியே தாயே போற்றி
100; ஓம் ஈகையே ஈரமே போற்றி
101 ஓம் ஈடில்லா உன் புகழ் போற்றி
102 ஓம் ஈடு இணையற்றவளே போற்றி
103 ஓம் ஈடுபாடு உன்மேல் கொண்டேன் போற்றி
104 ஓம் ஈரடி வெண்பாவால் உன்புகழ் போற்றுவேன் போற்றி
105 ஓம் ஈர நெஞ்சம் உடையாய் போற்றி
106 ஓம் ஈருயிர்க்காரியாய் என்னை நீ சுமந்தாய் போற்றி
107 ஓம் ஈரேழ் உலகமும் எனக்கு நீயே போற்றி
108 ஓம் ஈரைந்து திங்கள் என்னை மணிவயிற்றில் காத்தாய் போற்றி
109 ஓம் ஈனத்தனம் அகற்றுவாய் போற்றி
110 ஓம் ஈனப் பிறவியை போக்குவாய் போற்றி
111 ஓம் ஈனமில்லா வாழ்வருள் போற்றி
112 ஓம் ஈற்று நேரத்தில் என்னை நீ காத்தருள் போற்றி
113 ஓம் உண்மைப் பொருளாய் விளங்குபவளே போற்றி
114 ஓம் உத்தமி நீ என்னைக் காப்பாய் போற்றி
115 ஓம் உய்யும் வழிப் புகல்வாய் போற்றி
116 ஓம் உய்விடம் உனையன்றி வேறில்லை போற்றி
117 ஓம் உல்லாச வாழ்வு வேண்டிலேன் போற்றி
118 ஓம் உள்வணக்கம் என்றும் உனக்கே போற்றி
119 ஓம் உள்ளம் கவரும் தெய்வமே போற்றி
120 ஓம் உள்ளும் புறமும் நீயே போற்றி
121 ஓம் உன்மத்தம் அழிப்பாய் போற்றி
122 ஓம் உன்னத தெய்வமே போற்றி
123 ஓம் உடமை என்க்கு நீயே போற்றி
124 ஓம் உதடுகள் உவப்புடன் காப்பாய் போற்றி
125 ஓம் உபசரணைகள் பல உனக்கே போற்றி
126 ஓம் உபாதைகள் நேராமல் காத்தருள் போற்றி
127 ஓம் உயர்விடம் உள்ளாய் போற்றி
128 ஓம் உயர்வு தாழ்வற்ற நிலை அருள்வாய் போற்றி
129 ஓம் உரமாய் என்னுள் இருப்பாய் போற்றி
130 ஓம் உருக்கமாய் உன்புகழ் பாடுவேன் போற்றி
131 ஓம் உலக நாயகியே போற்றி
132 ஓம் உலக மயமே போற்றி
133 ஓம் உலகம் முழுவதும் என்க்கு நீயே போற்றி
134 ஓம் உலகுறை உயிர்களைக் காப்பாய் போற்றி
135 ஓம் உவகைத் தேன்மொழியே போற்றி
136 ஓம் உவப்புடன் அருள்வாய் போற்றி
137 ஓம் உவமை இல்லாதவளே போற்றி
138 ஓம் உழைத்து வாழ்வோர்க்கு உறுதுணையே போற்றி
139 ஓம் உறவாய் எனக்கு வந்த பேறே போற்றி
140 ஓம் ஊக்கம் கொடுத்து என்னைக் காப்பாய் போற்றி
141 ஓம் ஊழ்வினைத் தீர்ப்பாய் போற்றி
142 ஓம் ஊன் உறக்கம் இன்றி என்னை தினம் காத்தாய் போற்றி
143 ஓம் ஊன்றுகோல் எனக்கு என்றும் நீயே போற்றி
144 ஓம் ஊடுருவி எங்ஙனமும் திகழ்வாய் போற்றி
145 ஓம் ஊதாரித்தனம் போக்குவாய் போற்றி
146 ஓம் ஊமைகளைப் பேச வைப்பாய் போற்றி
147 ஓம் ஊழிநாள் தன்னில் காத்தருள்வாய் போற்றி
148 ஓம் ஊனம் பலபோக்கி சுகவாழ்வளிப்பாய் போற்றி
149 ஓம் எங்கள் குலவிளக்காய் திகழ்வாய் போற்றி
150 ஓம் எஞ்சுதல் இல்லா அன்பு செய்பவளே போற்றி
151 ஓம் எண்திசைக் காவல் நீயே போற்றி
152 ஓம் எண்பொருள் நீயே போற்றி
153 ஓம் எண்ணம் யாவிலும் நீயே போற்றி
154 ஓம் எப்பொழுதும் எம்மைக் காப்பாய் போற்றி
155 ஓம் எப்பொழுதும் என்னைப் பிரியாதிரு போற்றி
156 ஓம் எள்ளளவும் அன்பு குறையாதவளே போற்றி
157 ஓம் என்றும் என்னுடன் இருப்பாய் போற்றி
158 ஓம் என்றும் எனக்கு எல்லாமும் நீயே போற்றி
159 ஓம் எதிர்ப்பு இல்லாத வாழ்வருள் போற்றி
160 ஓம் எதிர்ப்பதம் அற்ற மனமருள் போற்றி
161 ஓம் எதனினும் நீயிருந்து அருள்வாய் போற்றி
162 ஓம் எதனையும் சாதிக்கும் வன்மை அருள்வாய் போற்றி
163 ஓம் எமபயம் அகற்றுவாய் போற்றி
164 ஓம் ஏக்கம் தவிர்த்தெம்மை காத்தருள் போற்றி
165 ஓம் ஏத்துவோம் உன்புகழ் என்றுமே போற்றி
166 ஓம் ஏந்திழையே போற்றி
167 ஓம் ஏற்றம் மிகுந்த வழ்வருள் போற்றி
168 ஓம் ஏத்துவோம் உன்புகழ் எந்நாளும் போற்றி
169 ஓம் ஏக சிந்தனை உன்மேல் தானே போற்றி
170 ஓம் ஏக போக சுகம் வேண்டிலேன் போற்றி
171 ஓம் ஏசுவோர் மனதை மாற்றுவாய் போற்றி
172 ஓம் ஏதிலார் குற்றம் பொருக்க அருள் போற்றி
173 ஓம் ஏமாந்து போகா மனமருள் போற்றி
174 ஓம் ஏழிசை ஸ்வர லயமே போற்றி
175 ஓம் ஏழுலகமும் எனக்கு நீயே போற்றி
176 ஓம் ஏழை எளியோர் துணை நீயே போற்றி
177 ஓம் ஏழை எனைக் காப்பாய் போற்றி
178 ஓம் ஐம்புலனால் உன்னைப் போற்றுவேன் போற்றி
179 ஓம் ஐம்பொறி அடக்கி ஆள அருள்செய் போற்றி
180 ஓம் ஐந்திலக்கணம் அறிவிப்பாய் போற்றி
181 ஓம் ஐஸ்வர்யம் தந்து கடன் போக்குவாய் போற்றி
182 ஓம் ஐய உணர்வினைப் போக்குவாய் போற்றி
183 ஓம் ஐயம் இன்றித் தொழுவேன்
184 ஓம் ஐயம் திரிபரக் கற்க அருள்வாய் போற்றி
185 ஓம் ஒட்டுக் காய்ச்சல் மாய்ப்பாய் போற்றி
186 ஓம் ஒத்தைவழிப் பாதை தான்னில் துணையிருந்து காத்தருள் போற்றி
187 ஓம் ஒப்பில்லா மணியே போற்றி
188 ஓம் ஒப்புமை இல்லாளே போற்றி
189 ஓம் ஒப்புரவுடன் வாழ அருள்வாய் போற்றி
190 ஓம் ஒற்றைத் தலைவலி நோய் போக்குவாய் போற்றி
191 ஓம் ஒன்பொருள் நீயே போற்றி
192 ஓம் ஒன்பான் சுவை நீயே போற்றி
193 ஓம் ஒன்றுபட்டு வாழ அருள் செய்வாய் போற்றி
194 ஓம் ஒருசுகம் வேண்டிலேன் போற்றி
195 ஓம் ஒருமித்த மனதுடன் வழிபட அருள்வாய் போற்றி
196 ஓம் ஒருமுறை அழத்திடினும் ஓடிவந்து காப்பவளே போற்றி
197 ஓம் ஒளிர்முகம் உடையாய் போற்றி
198 ஓம் ஒளிமயமான வாழ்வு நல்குவாய் போற்றி
199 ஓம் ஒளிமறைவு இல்லாளே போற்றி
200 ஓம் ஓம்கார ஸ்வரூபியே போற்றி
201 ஓம் ஓசையாய் நீயிருப்பாய் போற்றி
202 ஓம் ஓதும் வேத மறைப்பொருளே போற்றி
203 ஓம் ஔடதமாய் திகழ்ந்தெம்மைக் காப்பாய் போற்றி
204 ஓம் ஔவைப் போல கவிபாட அருள்வாய் போற்றி
205 ஒம் கங்கணம் சூட்டி மகிழ்வேன் போற்றி
206 ஓம் கங்கு கரைக் காணாக் கருணைக் கடலே போற்றி
207 ஓம் கட்டளைக்கு இணங்க நான் செயல்படுவேன் போற்றி
208 ஓம் கட்டழகுப் பெட்டகமே போற்றி
209 ஓம் கட்டிக் காத்தாய் எந்தனை நீயே
210 ஓக் கட்புலம் என்னக்கு நீயே போற்றி
211 ஓம் கண்கூடாய் உன்னருள் பெற்றென் போற்றி
212 ஓம் கண்மணிப் பாவையே போற்றி
213 ஓம் கண்மலர்ந்து அருள்செய்வாய் போற்றி
214 ஓம் கண்விழித்து என்னைக் காத்தாய் போற்றி
215 ஓம் கண்ணிற்கு கண்ணாய் என்னைக் காத்தாய் போற்றி
216 ஓம் கஸ்தூரிப் பொட்டிட்டு மகிழ்வேன் போற்றி
217 ஓம் கண்ணியம் காத்தருள துணைபுரிவாய் போற்றி
218 ஓம் கண்ணென என்னைக் காத்தாய் போற்றி
219 ஓம் கம்பீரமாய் திகழ அருள்புரி போற்றி
220 ஓம் கர்ப்ப கிரகத்தில் என்னைக் காத்தாய் போற்றி
221 ஓம் கர்பிணிப் பெண்களைக் காத்தருள் போற்றி
222 ஓம் கர்நாடக இசைபாடித் துதிசெய்வேண் போற்றி
223 ஓம் கல்விக்கண் நல்குவாய் போற்றி
224 ஓம் கல்விமானாய்த் திகழ அருள்புரி போற்றி
225 ஓம் கல்வி அறிவு பெற அருள் போற்றி
226 ஓம் கற்பக ஊற்றே போற்றி
227 ஓம் கற்பகமே கருணை விழியால் காத்தருள் போற்றி
228 ஓம் கற்பக விருக்ஷ்மே போற்றி
229 ஓம் கற்பனைக்கு எட்டா கனிரசமே போற்றி
230 ஓம் கற்பு நிலை வழுவா நிலையருள் போற்றி
231 ஓம் கற்றதெல்லாம் உன்புகழ் பாடவே போற்றி
232 ஓம் ககன இருள் போக்குவாய் போற்றி
233 ஓம் ககன வெளி ஆனாய் போற்றி
234 ஓம் கடம்ப மலரின் மணமே போற்றி
235 ஓம் கடம்ப மலரே போற்றி
236 ஓம் கடமை ஆற்ற அருள் செய்வாய் போற்றி
237 ஓம் கடலும் மலையும் நீயே போற்றி
238 ஓம் கடன் தொல்லை தீர் அருள்வாய் போற்றி
239 ஓம் கடுஞ்சொல் மொழி கூறா நிலையருள் போற்றி
240 ஓம் கடைக்கண்ணாலே பார்த்தருள் போற்றி
241 ஓம் கடைத்தேற வழிபுகல் கண்மணி போற்றி
242 ஓம் கடை நாள் தன்னில் காப்பாய் போற்றி
243 ஓம் கணப்பொழுதும் என்னைப் பிரியாதிரு போற்றி
244 ஓம் கபவாத சுர நோய் போக்குவாய் போற்றி
245 ஓம் கபோதி தனக்குப் பார்வையருள் போற்றி
246 ஓம் கமலக் கண்ணால் பார்த்தருள் போற்றி
247 ஓம் கயவர் தம்மிடம் இருந்து காத்தருள் போற்றி
248 ஓம் கரஹரப்ரியா ராகப் பிரியையே போற்றி
249 ஓம் கரு உயிர்த்து நலம் பெற அருள்புரி போற்றி
250 ஓம் கருக்கல்தன்னில் காப்பாய் போற்றி
251 ஓம் கருகுதல் இல்லா நிலையருள் போற்றி
252 ஓம் கருத்தினில் நீயிருந்து கத்தருள் போற்றி
253 ஓம் கருத்தே கனிரசமே போற்றி
254 ஓம் கருதும் செயல் நன்மையில் முடிய அருள்வாய் போற்றி
255 ஓம் கருதும் மெய்ப்பொருளே போற்றி
256 ஓம் கருவாய் என்னை சுமந்தாய் போற்றி
257 ஓம் கரைபுரண்ட கருணை மிக்கவளே போற்றி
258 ஓம் கலங்கா நிலையருள் போற்றி
259 ஓம் கலையெழில் அழகே போற்றி
260 ஓம் கவலையெல்லாம் போக்குவாய் போற்றி
261 ஓம் கவனம் சிதறாமல் இருக்க அருள்புரி போற்றி
262 ஓம் கவித்துவம் பல பெற அருள்வாய் போற்றி
263 ஓம் கவினுறு காட்சியாய் திகழ்வாய் போற்றி
265 ஒம் களங்கமற்ற மனமருள் போற்றி
266 ஓம் கழிப்பிறப்பு(முற்பிறவி) செய்வினை மாய்ப்பாய் போற்றி
267 ஓம் கழுத்தினைக் கனிவுடன் காப்பாய் போற்றி
268 ஓம் கனவும் நனவும் நீயே போற்றி
269 ஓம் கனிமொழிச் சுவையே போற்றி
270 ஓம் கனிவுடன் காப்பாய் போற்றி
271 ஓம் காந்தவடிவினளே போற்றி
272 ஓம் கார்த்திகை தீப ஒளிச்சுடராய் திகழ்பவளே போற்றி
273 ஓம் கார்மேகக் கருணை மழையே போற்றி
274 ஓம் கால்கள் இரண்டினையும் காப்பாய் போற்றி
275 ஓம் காற்று வெளி நீயே போற்றி
276 ஓம் காச நோய் போக்குவாய் போற்றி
277 ஓம் காணக் கண்கோடி தந்தருள் போற்றி
278 ஓம் காதம்பரி கருணாமயி போற்றி
279 ஓம் காதலாகி கசிந்துருகிப் பாட அருள் போற்றி
280 ஓம் காமதேனுவாய்த் திகழ்வாய் போற்றி
281 ஓம் காமரு கண்ணெழிலே போற்றி
282 ஒம் காயத்ரி மந்திரமாய் திகழ்பவே போற்றி
283 ஓம் காயம் பொய்யென உணர்ந்தேன் போற்றி
284 ஓம் காரண காரியமே போற்றி
285 ஓம் காரிருள் தனிலே துணை நீயே போற்றி
286 ஓம் காருண்யச் சுடரே போற்றி
287 ஓம் காலமெல்லாம் காத்தருள்வாய் போற்றி
288 ஓம் காலை கதிரின் சுடரே போற்றி
289 ஓம் காலை மாலை இரவென முப்பொழுதும் போற்றுவேன் போற்றி
290 ஓம் காவல் எனக்கு நீயே போற்றி
291 ஓம் காவல் தெய்வமாய் திகழ்வாய் போற்றி
292 ஓம் காவலாய் நீயிருப்பாய் போற்றி
293 ஓம் காவியமே ஓவியமே போற்றி
294 ஓம் காளமேகப் புலவன் போல் பாட அருள் போற்றி
295 ஓம் கானம் இசைத்து உன் புகழ் பாடுவேன் போற்றி
296 ஓம் கானடா ராகக் கனிமொழியே போற்றி
297 ஓம் கிங்கிணி சதங்கை மணி அணிவிப்பேன் போற்றி
298 ஓம் கிட்டே நீயிருந்து காத்தருள் போற்றி
299 ஓம் கின்னரரும் நாரதரும் பல தேவாதி தேவர்களும் போற்றும் பேரெழிலே போற்றி
300 ஓம் கிளிமொழி பேசும் கனிமொழியே போற்றி
301 ஓம் கிளைஞர் தம்மைக் காத்தருள் போற்றி
302 ஓம் கிழமைகள் யாவும் நீயே போற்றி
303 ஓம் கீர்த்தனைகள் பல பாட அருள்வாய் போற்றி
304 ஓம் கீர்த்தி பல பெற அருள் போற்றி
305 ஓம் கீழ்த்தர எண்ணம் அகற்றுவாய் போற்றி
306 ஒம் கீதம் இசைப்பேன் போற்றி
307 ஓம் கீதமே இசையே போற்றி
308 ஓம் கீதையின் சாரமே போற்றி
309 ஓம் கீரவாணி ராகப் பிரியையே போற்றி
310 ஓம் கீழே விழாமல் காத்தருள் போற்றி
311 ஓம் குங்குமத்தைக் காப்பாய் போற்றி
312 ஓம் குங்குமப் பொட்டிட்டு மகிழ்வேன் போற்றி
313 ஓம் கும்பிட்டேன் உன்னையே தெய்வமென போற்றி
314 ஓம் கும்பிருவோர் துயர் துடைப்பாய் போற்றி
315 ஓம் குணசுந்தரியே போற்றி
316 ஓம் குணநலன்கள் நல்குவாய் போற்றி
317 ஓம் குதக்கமாகப் பேசுவோரைத் திருத்துவாய் போற்றி
318 ஓம் குருடரைக் காணச் செய்வாய் போற்றி
319 ஓம் குலக்கொடியே போற்றி
320 ஓம் குல விளக்கே போற்றி
321 ஓம் குவலயத்தாரைக் காத்தருள் போற்றி
322 ஓம் குவலயம் போற்றும் பேரெழிலே போற்றி
323 ஓம் குவளை மலர் கண்ணாளே போற்றி
324 ஓம் குளிர்சுரம் வராமல் காப்பாய் போற்றி
325 ஓம் குழப்பமற்ற மனமருள் போற்றி
326 ஓம் குழந்தை மனம் கொண்டவளே போற்றி
327 ஓம் குழவியாம் என்னைக் காப்பாய் போற்றி
328 ஓம் குறிக்கோள் வெற்றிபெற துணைவருவாய் போற்றி
329 ஓம் குறிப்பறிந்து உதவி நல்கும் கருணை மழையே போற்றி
330 ஓம் குறைபாடற்ற நிலையருள் போற்றி
331 ஓம் குறையாவும் போக்குவாய் போற்றி
332 ஓம் குறைவற்ற செல்வம் தந்தருள்வாய் போற்றி
333 ஓம் கூச்சம் அகற்றுவாய் போற்றி
334 ஓம் கூப்பிட்ட குரலுக்கு உடனே பதில் நல்கியருள்வாய் போற்றி
335 ஓம் கூர்மதி நகுவாய் போற்றி
336 ஓம் கூர்வினைத் தவிர்ப்பாய் போற்றி
337 ஓம் கூற்றென்னை அணுகாமல் தினம் காத்தருள் போற்றி
338 ஓம் கூறி மகழ்வேன் உன் நாமமே போற்றி
339 ஓம் கூனினைப் போக்குவாய் போற்றி
340 ஓம் கெஞ்சினேன் உன்னருள் தன்னையே போற்றி
341 ஓம் கெட்ட கனவு அகற்றுவாய் போற்றி
342 ஓம் கெடுதல் நேராமல் காத்தருள் போற்றி
343 ஓம் கெடுமதி உள்ளோரைத் திருத்துவாய் போற்றி
344 ஓம் கேட்டதெல்லாம் தருபவளே போற்றி
345 ஓம் கேள்விபதில் நீயே போற்றி
346 ஓம் கேடற்ற வாழ்வினை நல்குவாய் போற்றி
347 ஓம் கேடு நினையா மனமருள் போற்றி
348 ஓம் கேதார கௌளை ராகத்தில் உன்னைப் போற்றினேன் போற்றி
349 ஓம் கேவல வாழ்வினைத் தடுத்தருள் போற்றி
350 ஓம் கேளீர் தம்மைக் காத்தருள் போற்றி
351 ஓம் கைக்கொடுத்தெங்களைக் காத்தருள் போற்றி
352 ஓம் கைப்புனைந்து இயற்றா கவினுறு எழிலே போற்றி
353 ஓம் கைமாறு கருதா அன்பு செலுத்துபவளே போற்றி
354 ஓம் கைமேல் பலனுன்னைப் போற்றுவாருக்குப் போற்றி
355 ஓம் கைமை அறுப்பாய் போற்றி
356 ஓம் கைகள் இரண்டும் கருணையுடன் காப்பாய் போற்றி
357 ஓம் கையறு நிலை போக்குவாய் போற்றி
358 ஓம் கொங்கு மணித் திருநாட்டின் தங்கமே போற்றி
359 ஓம் கொஞ்சும் தமிழழகே போற்றி
360 ஓம் கொண்டவன் தன்னை காத்தருள் போற்றி
361 ஓம் கொண்டேன் என் மனத்துன்னை போற்றி
362 ஓம் கொம்புத் தேனினும் சுவையே போற்றி
363 ஓம் கொல்வினை மாய்ப்பாய் போற்றி
364 ஓம் கொவ்வைச் செவ்வாய் மொழியே போற்றி
365 ஓம் கொன்றை மலர் விரும்புபவளே போற்றி
366 ஓம் கொடுங்கோல் தன்னை மாய்த்தருள் போற்றி
367 ஓம் கொடுமை செயல்களை மாய்ப்பாய் போற்றி
368 ஓம் கொடுமை புரியா மனமருள் போற்றி
369 ஓம் கொலைபாதகச் செயல்களைத் தவிர்ப்பாய் போற்றி
370 ஓம் கோட்பாடு உயர்வானதாய் கருத அருள் போற்றி
371 ஓம் கோடி இன்ப ஊற்றே போற்றி
372 ஓம் கோடி நலம் அருள்வாய் போற்றி
373 ஓம் கோடை வெயில் தணிப்பாய் போற்றி
374 ஓம் கோணலை அகற்றி நிவர்த்தி செய்வாய் போற்றி
375 ஓம் கோப குணமது தவிர்க்க அருள் போற்றி
376 ஓம் கோபிசந்தனம் சூட்டுவேன் போற்றி
377 ஓம் கோமகளே உன் திருவடி போற்றி
378 ஓம் கோமளையே யாமளையே போற்றி
379 ஓம் கோமேதகமே போற்றி
380 ஓம் கோரம் அகற்றி
381 ஓம் கோரிக்கை நிறைவேற்றி அருள்வாய் போற்றி
382 ஓம் கோலப் பேரெழிலே போற்றி
383 ஓம் கோலமிட்டு மகிழ்வேன் போற்றி
384 ஓம் கோவில் முழுவதிலும் நீயே போற்றி
385 ஓம் கோவைக் கனிச் செவ்வாய் மொழியே போற்றி
386 ஓம் கௌஸ்துப மாலை அணிவித்து மகிழ்வேன் போற்றி
387 ஓம் சக்தி வடிவமே போற்றி
388 ஓம் சங்கடம் தீர்ப்பாய் போற்றி
389 ஓம் சங்கராபரண ராகம் இசைப்பேன் போற்றி
390 ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
391 ஓம் சண்முகப் பிரியா ராக இசைப்பிரியையே போற்றி
392 ஓம் சத்திய சோதனை விரும்பாதவளே போற்றி
393 ஓம் சத்தியமே நித்தியமே போற்றி
394 ஓம் சத்திய ஸ்வரூபிணியே போற்றி
395 ஓம் சத்துரு இன்றிக் காத்தருள் போற்றி
396 ஓம் சத்துவ குணம் கொண்டவளே போற்றி
397 ஓம் சந்தியா கால ஒளி தீபமே போற்றி
398 ஓம் சப்தத் தாள இசையே போற்றி
399 ஓம் சப்தஸ்வர ரூபிணியே போற்றி
400 ஓம் சப்பாணி நடந்திட அருள்புரி போற்றி
401 ஓம் சம்பூரணமாய் திகழ்வாய் போற்றி
402 ஓம் சர்வ மங்களம் அருள்வாய் போற்றி
403 ஓம் சர்வலோக நாயகியே போற்றி
404 ஓம் சர்வ வல்லமை பொருந்தியவளே போற்றி
405 ஓம் சர்வ வியாபினியாய் திகழ்வாய் போற்றி
406 ஓம் சன்மார்க்க நெறியருள் போற்றி
407 ஓம் சடுதியில் வந்தெம்மைக் காப்பாய் போற்றி
408 ஓம் சதா என்னைக் காப்பாய் போற்றி
409 ஓம் சபலங்கள் ஏற்படாமல் காப்பாய் போற்றி
410 ஓம் சமம் இல்லாதவளே போற்றி
411 ஓம் சமரசம் அருள்வாய் போற்றி
412 ஓம் சரணடைந்தேன் உன் பாதம் போற்றி
413 ஓம் சரணடைந்தோர் துயர் தீர்ப்பவளளே போற்றி
414 ஓம் சரஸ்வதி கடாட்சம் அருள்வாய் போற்றி
415 ஓம் சரீரத்தால் உன்புகழ் துதிப்பேன் போற்றி
416 ஓம் சாட்சி எனக்கு நீயே போற்றி
417 ஓம் சாஸ்திரங்கள் பல கற்க அருள்வாய் போற்றி
418 ஓம் சாத்வீக வடிவமே போற்றி
419 ஓம் சாந்துணையும் காத்தருள் போற்றி
420 ஓம் சாம்பவி சங்கரி போற்றி
421 ஓம் சாய்தல் (தளர்தல்) அற்ற மனநிலை அருள்வாய் போற்றி
422 ஓம் சாற்றி உன் புகழ் போற்றுவேன் போற்றி
423 ஓம் சான்றோனாக விளங்கச் செய் போற்றி
424 ஓம் சாஸ்திரங்கள் நீயே போற்றி
425 ஓம் சாகாமருந்து வேண்டிலேன் போற்றி
426 ஓம் சாகித்யம் பல பாட அருள் புரிவாய் போற்றி
427 ஓம் சாதனை புரிய அருள்வாய் போற்றி
428 ஓம் சாரம்ச தீபமே போற்றி
429 ஓம் சாலப் பேசும் அமிழ்தே போற்றி
430 ஓம் சிக்கல் பல போக்குவாய் போற்றி
431 ஓம் சிக்கென உன் பாதம் பற்றினேன் போற்றி
432 ஓம் சிங்கார கலையெழிலே போற்றி
433 ஓம் சிந்தனைக்கு எட்டா பேரின்பமே போற்றி
434 ஓம் சிந்தனையில் நீயிருப்பாய் போற்றி
435 ஓம் சிற்குணம் (மெய்யறிவு) தந்தருள் போற்றி
436 ஓம் சிற்றின்பத்தில் ஆழாமல் காப்பாய் போற்றி
437 ஓம் சின்மய ஸவரூபியே போற்றி
438 ஓம் சிசுவாய் என்னைப் பாராட்டி வளர்த்தாய் போற்றி
439 ஓம் சிரசால் பணிந்தேத்துவேன் போற்றி
440 ஓம் சிரத்தினைக் காப்பாய் போற்றி
441 ஓம் சிரம்மம் அற்ற மனமருள் போற்றி
442 ஓம் சிறுமை படுதல் இன்றி காப்பாய் போற்றி
443 ஓம் சினத்தை வேரறுப்பாய் போற்றி
444 ஓம் சீக்கிரம் வருவாய் போற்றி
445 ஓம் சீர்தூக்கி செம்மையருள் போற்றி
446 ஓம் சீர்மேவும் வாழ்வு நல்குவாய் போற்றி
447 ஓம் சீற்றம் தவிர்ப்பாய் போற்றி
448 ஓம் சீரிய பெருமை உடையவளே போற்றி
449 ஓம் சீவ காருண்ய ஒழுக்கம் கொண்டு வாழ அருள் போற்றி
450 ஓம் சுக்கிலம் அடக்கியாள அருள்வாய் போற்றி
451 ஓம் சுத்தமனம் உடையவளே போற்றி
452 ஓம் சுந்தர எழிலே போற்றி
453 ஓம் சுந்தரத் தமிழல் உன் பாதம் போற்றுவேன் போற்றி
454 ஓம் சுகதுக்கம் போக்குவாய் போற்றி
455 ஓம் சுகபோகம் வேண்டிலேன் போற்றி
456 ஓம் சுக பிரம்ம வடிவே போற்றி
457 ஓம் சுடர் ஒளிவிளக்கே போற்றி
458 ஓம் சுபகோள்கள் சுற்றி நின்று நலம் தர அருள்புரி போற்றி
459 ஓம் சுபமான முடிவினை அருள்பவளே போற்றி
460 ஓம் சுயம்பாகி எம்மைக் காப்பவளே போற்றி
461 ஓம் சுயமாக சிந்தனை செயல்புரிய அருள்வாய் போற்றி
462 ஓம் சுலபமாய் செயல்புரிய அருள்வாய் போற்றி
463 ஓம் சுலோகம் பல பாட அருள்புரி போற்றி
464 ஓம் சுவர்ண பிம்பமே போற்றி
465 ஓம் சுவர்ண லஷ்மி தாயே போற்றி
466 ஓம் சுவாச உறுப்புகளைக் காப்பாய் போற்றி
467 ஓம் சுவாசம் எனக்கு என்றும் நீயே போற்றி
468 ஓம் சூட்சுமபுத்தி நல்குவாய் போற்றி
469 ஓம் சூழ்ச்சி செய்வோரைத் திருத்துவாய் போற்றி
470 ஓம் சூடம் ஏற்றி வழிபடுவேன் போற்றி
471 ஓம் சூரரை வீழ்த்துவாய் போற்றி
472 ஓம் சூரிய பிரகாசமாய் திகழ்பவளே போற்றி
473 ஓம் சூனியம் அகற்றிக் காத்தருள் போற்றி
474 ஓம் செங்கமலக் கண்ணால் காத்தருள் போற்றி
475 ஓம் செங்கனி வாமுத மொழியாலருள் போற்றி
476 ஓம் செஞ்சுடரே ஒளியே போற்றி
477 ஓம் செண்பகமே செந்தூரமே போற்றி
478 ஓம் செந்தாமரைக் கண்ணழகே போற்றி
479 ஓம் செந்தூரப்பொட்டிட்டு மகிழ்வேன் போற்றி
480 ஓம் செம்மொழிச் சுடரே போற்றி
481 ஓம் செய்தொழில் சிறப்புற்று விளங்க அருள் போற்றி
482 ஓம் செய்வினை தன்னை மாய்த்தருள் போற்றி
483 ஓம் செய்யுள் பலபாடி புகழ அருள்புரி போற்றி
484 ஓம் செல்கதி உனையன்றி வேறில்லை போற்றி
485 ஓம் செவ்வரளி மலரால் உன்னைத் துதிப்பேன் போற்றி
486 ஓம் செவ்வாம்பல் மலரால் துதிப்பேன் போற்றி
487 ஓம் ஜெகஜோதி வடிவாய் திகழ்பவளே போற்றி
488 ஓம் செயம் எதிலும் பெற அருள் போற்றி
489 ஓம் செருக்கற்ற மனமருள் போற்றி
490 ஓம் செலவு அதிகமாகிடாமல் காப்பாய் போற்றி
491 ஓம் செவிமடுத்து அருள் செய்வாய் போற்றி
492 ஓம் செவியிரண்டும் காப்பாய் போற்றி
493 ஓம் சேய் எனைக் காத்தருள் திருவே போற்றி
494 ஓம் சேய்மை அண்மை எனாதபடி எங்கணும் திகழ்வாய் போற்றி
495 ஓம் சேல்விழியாளே போற்றி
496 ஓம் சேமிப்பு உன் நாமஜபம் போற்றி
497 ஓம் சேவடித் தொழுதெழுவேன் போற்றி
498 ஓம் சேவடித் தொழ சிறப்பு செய்வாய் போற்றி
499 ஓம் சேவித்தேன் உன் பாதம் போற்றி
500 ஓம் சேவித்தெழுவோர் துயர் மாய்ப்பாய் போற்றி
501 ஓம் சொர்கபோகம் வேண்டிலேன்
502 ஓம் சொர்கமே உன் நாம ஜபம் போற்றி
503 ஓம் சொல்புத்தி கேட்போரைத் திருத்துவாய் போற்றி
504 ஓம் சொல்லும் பொருளும் நீயே போற்றி
505 ஓம் சொல்வன்மை அருள்வாய் போற்றி
506 ஓம்சொற்களஞ்சியம் பெருக்க அருள் போற்றி
507 ஓம் சொற்சுவை பொருட்சுவை நீயே போற்றி
508 ஓம் சொன்ன சொல் காக்க அருள் போற்றி
509 ஓம் சோம்பல் அகற்றுவாய் போற்றி
510 ஓம் சோர்ந்த உள்ளத்திற்கு ஆறுதல் நீயே போற்றி
511 ஓம் சோர்வினைக் களைவாய் போற்றி
512 ஓம் சோகம் அகற்றுவாய் போற்றி
513 ஓம் சோதரனைக் காத்தருள் போற்றி
514 ஓம் சோதரிகளைக் காப்பாய் போற்றி
515 ஓம் ஜோதிவடிவானவளே போற்றி
516 ஓம் சோதனை செய்யாமல் காப்பாய் போற்றி
517 ஓம் சோபையே ஜோதியே போற்றி
518 ஓம் சௌகரியமுடன் உலகத்தார் வாழ அருள்புரிவாய் போற்றி
519 ஓம் சௌபாக்யம் அனைவருக்கும் தந்தருள் போற்றி
520 ஓம் ஞாய்(தாய்) நீ எனக்கருள் போற்றி
521 ஓம் ஞாலம் சிறப்புற்று ஓங்க அருள்புரி போற்றி
522 ஓம் ஞானகுருவாய் எனக்கு நீ விளங்கியருள் போற்றி
523 ஓம் ஞானம் தந்தெம்மைக் காத்தருள் போற்றி
524 ஓம் ஞேயமுடன் வாழ அருள்புரி போற்றி
525 ஓம் தஞ்சம் உன் பாதம் போற்றி
526 ஓம் தண்ணளி செய்வாய் தயையே போற்றி
527 ஓம் தண்டமிழ் சுவையே போற்றி
528 ஓம் தண்ணிலவே போற்றி
529 ஓம் தத்துவப் பொருள் நீ போற்றி
530 ஓம் தந்தேன் எந்தனை உந்தனுக்கு போற்றி
531 ஓம் தந்தையைக் காத்தருள் தயையே போற்றி
532 ஓம் தப்பேதும் நான் செய்தால் தாய் நீ பொறுத்தருள் போற்றி
533 ஓம் தற்சாட்சிக்கு(மனசாட்சி) கட்டுப்பட்டு நடக்க அருள் போற்றி
534 ஓம் தற்செருக்கற்ற மனமருள் போற்றி
535 ஓம் தற்பிரகாச ஒளிநிலவாய் திகழ்பவளே போற்றி
536 ஓம் தன்யாசி ராகத்தில் உன்புகழ் இசைப்பேன் போற்றி
537 ஓம் தன்னலம் கருதா தயையே போற்றி
538 ஓம் தன்னிகரில்லாத் தாயே போற்றி
539 ஓம் தகுதியுடன் வாழ அருள்வாய் போற்றி
540 ஓம் தடுமாற்றமற்ற மனமருள் போற்றி
541 ஓம் தமக்கையர் தம்மைக் காத்தருள் போற்றி
542 ஓம் தமிழே அமுதமே போற்றி
543 ஓம் தமையனைக் காத்தருள் தாயே போற்றி
544 ஓம் தயக்கமின்றி உன்புகழ் பாடுவேன் போற்றி
545 ஓம் தயையே தன்மையே போற்றி
546 ஓம் தராதரம் உணர்ந்திட அருள்புரி போற்றி
547 ஓம் தரித்திரம் போக்கியருள் போற்றி
548 ஓம் தருணம் எமைக்காக்க போற்றி
549 ஓம் தலைகுனிவில்லா நிலையருள் போற்றி
550 ஓம் தலை சுற்றல் நோயை போக்குவாய் போற்றி
551 ஓம் தலைபாரம் தன்னை போக்கியருள் போற்றி
552 ஓம் தலைமைப் பொருளாய் விளங்குபவளே போற்றி
553 ஓம் தவத்திரு வடிவே போற்றி
554 ஓம் தவறுதல் இல்லா நிலையருள் போற்றி
555 ஓம் தவிப்போர் உறுதுணையே போற்றி
556 ஓம் தளர்ச்சியை அகற்றுவாய் போற்றி
557 ஓம் தளர்வில் ஊன்று கோலாய் நிற்பவளே போற்றி
558 ஓம் தளரா மனமருள் போற்றி
559 ஓம் தளிகை பலவற்றை சமர்ப்பிப்பேன் போற்றி
560 ஓம் தன தான்யம் அருள்வாய் போற்றி
561 ஓம் தனயனைக் காத்தருள் தாயே போற்றி
562 ஓம் தனிப்பெருங்கருணையே போற்றி
563 ஓம் தாங்கொணா துயர் துடைப்பாய் போற்றி
564 ஓம் தாம்பூலம் சமர்ப்பித்து மகிழ்வேன் போற்றி
565 ஓம் தாய் நீ எனக்கருள் போற்றி
566 ஓம் தாய் நீ சகல உயிர்க்கும் போற்றி
567 ஓம் தாழ்ச்சி வளர்ச்சி நிலையருள் போற்றி
568 ஓம் தாழ்ந்த நிலையிலும் உன் நினைவு அகல்லாமல் காப்பாய் போற்றி
569 ஓம் தாழ்வுஉயர்வு என்ற எண்ணம் அற்றவளே போற்றி
570 ஓம் தான் என்ற அகந்தை அழிப்பாய் போற்றி
571 ஓம் தான் தனக்கு எந்போரின் எண்ணத்தை மாற்றுவாய் போற்றி
572 ஓம் தாசன் நான் உனக்கே போற்றி
573 ஓம் தாபம் அகற்றுவாய் போற்றி
574 ஓம் தாமரைத் திருவடிகள் போற்றி
575 ஓம் தாயே தயையே போற்றி
576 ஓம் தாலிக்கு வேலியே போற்றி
577 ஓம் தாலி பாக்கியம் தந்தருள் போற்றி
578 ஓம் தாவர ஜங்கமங்களைக் காத்தருள் போற்றி
579 ஓம் தாளம் இசைத்து இசைப்பாடி மகிழ்வேன் போற்றி
580 ஓம் தாள ராக ஸவர பாவ லயமே போற்றி
581 ஓம் தாளாண்மை தவறாத மனமருள் போற்றி
582 ஓம் தாறுமாறு(குழப்பம்) அற்ற மனம் அருள்வாய் போற்றி
583 ஓம் திக்குவாய் உள்ளோர்க்கு பேசும் சக்தியருள் போற்றி
584 ஓம் திக்கெட்டும் நிறைந்திருப்பவளே போற்றி
585 ஓம் திங்களே திருவே போற்றி
586 ஓம் திட்பமான மனநிலை தினம் அருள் போற்றி
587 ஓம் தித்திக்கும் தேனமுதே போற்றி
588 ஓம் திவ்ய மங்கள ஸ்வரூபியே போற்றி
589 ஓம் திகட்டாச் சுவையே போற்றி
590 ஓம் திசையாவிலும் நீயிருந்து காத்தருள் போற்றி
591 ஓம் திடமான மனமருள் போற்றி
592 ஓம் திரியம்பிகே போற்றி
593 ஓம் திருப்பணி உனக்கே போற்றி
594 ஓம் திருநிறைச் செல்வியே போற்றி
595 ஓம் திருவடி சரணடைந்தேன் போற்றி
596 ஓம் திருவருள் புரிவாய் போற்றி
597 ஓம் திருவே உருவே போற்றி
598 ஓம் திலகத்தைக் காத்தருள் போற்றி
599 ஓம் திலகமிட்டு மகிழ்வேன் போற்றி
600 ஓம் திறம் பட செயல் புரிய அருள் போற்றி
601 ஓம் தினம் உன்னைப் பணிய அருள் போற்றி
602 ஓம் தினம் தினம் காத்தருள் போற்றி
603 ஓம் தீங்கு நினையா மனம் அருள் போற்றி
604 ஓம் தீங்கேதும் சிறிதும் அணுகாமல் காத்தருள் போற்றி
605 ஓம் தீஞ்சுவை நீயே போற்றி
606 ஓம் தீட்சை தந்தெம்மை ரட்சித்தருள் போற்றி
607 ஓம் தீந்தமிழ் சுவையே போற்றி
608 ஓம் தீந்தமிழால் உன்னைப் பாடி மகிழ்வேன் போற்றி
609 ஓம் தீர்க்க சுமங்கலியாய் வாழ அருள்வாய் போற்றி
610 ஓம் தீப மங்கள ஜோதியே போற்றி
611 ஓம் தீபமாய் ஒளிவீசுபவளே போற்றி
612 ஓம் தீபாராதனை உனக்கே போற்றி
613 ஓம் தீமையெல்லாம் போக்குவாய் போற்றி
614 ஓம் தீய குணம் மாய்ப்பாய் போற்றி
615 ஓம் தீய சிந்தனை எழாமல் இருக்க அருள்புரி போற்றி
616 ஓம் தீரச் செயல் புரிய அருள்வாய் போற்றி
617 ஓம் தீராவினை தீர்ப்பாய் போற்றி
618 ஓம் தீவினை மாய்ப்பாய் போற்றி
619 ஓம் தீன சரணங்களை உடையவளே போற்றி
620 ஓம் தீன ரட்சகியே போற்றி
621 ஓம் துக்கம் தன்னைப் போக்குவாய் போற்றி
622 ஓம் துர்மரணம் நிகழாமல் காத்தருள் போற்றி
623 ஓம் துன்பம் துடைத்தருள் போற்றி
624 ஓம் துணை எனக்கு நீயே போற்றி
625 ஓம் துணைவனைக் காத்தருள் போற்றி
626 ஓம் துயர் யாவும் போக்கும் தூயவளே போற்றி
627 ஓம் துலங்கிடும் ஒளியே போற்றி
628 ஓம் துவளா மனமருள் தூயவளே போற்றி
629 ஓம் துவளும் என் உள்ளத்திற்கு ஆறுதல் நீயே போற்றி
630 ஓம் தூள்போல துன்பங்கள் பறக்கச் செய்வாய் போற்றி
631 ஓம் துய நல் வடிவே போற்றி
632 ஓம் தூயோர் உள்ளத்து ஒளியே போற்றி
633 ஓம் தெள்ளுத் தமிழ்ப் பாவால் உன்னைப் போற்றினேன் போற்றி
634 ஓம் தெள்ளுத்தமிழ் பாவிற்கு மகிழ்வாய் போற்றி
635 ஓம் தென்திசையிலும் காவல் செய்வாய் போற்றி
636 ஓம் தென்னை இளநீர் அபிஷேகம் உனக்கே போற்றி
637 ஓம் தெவிட்டா இனபமே போற்றி
638 ஓம் தேய்மானம் இல்லா திருவே போற்றி
639 ஓம் தேற்றம் (உறுதி) தந்தெம்மைக் காத்தருள் போற்றி
640 ஓம் தேற்றுவாய் என் மனதை போற்றி
641 ஓம் தேந்தமிழால் உன்னைப் போற்றுவேன் போற்றி
642 ஓம் தேன்மலர்ச் சோலையே போற்றி
643 ஓம் தேக சுகம் வேண்டிலேன் போற்றி
644 ஓம் தேசம் முழுதும் காத்தருள் போற்றி
645 ஓம் தேடரும் பழம் பொருளே போற்றி
646 ஓம் தேடி உன்னைச் சரணடைந்தேன் போற்றி
647 ஓம் தேடினேன் உன்னையே தெய்வமென போற்றி
648 ஓம் தேடுவோர் மனதில் நிறைந்திருப்பாய் போற்றி
649 ஓம் தேமதுரச் சுவையே போற்றி
650 ஓம் தேவர் தொழும் பேரெழிலே போற்றி
651 ஓம் தேவாதி தேவர்பணியும் தெய்வமே போற்றி
652 ஓம் தேவிஸ்வரூபமே போற்றி
653 ஓம் தேவையாவும் நல்குவாய் போற்றி
654 ஓம் தேனிசைத் தென்றலே போற்றி
655 ஓம் தைத்திங்கள் திருவே போற்றி
656 ஓம் தைப்பொங்கால் உனக்கே போற்றி
657 ஓம் தையலே மயிலே போற்றி
658 ஓம் தொட்டதெல்லாம் துலங்கச் செய்வாய் போற்றி
659 ஓம் தொய்வற்ற திருவருள் புரிவாய் போற்றி
660 ஓம் தொல்லைகள் அகற்றுவாய் போற்றி
661 ஓம் தொல்லை மிகும் இப்புவி வாழ்வினின்று காப்பாய் போற்றி
662 ஓம் தொல்வினை மாய்ப்பாய் போற்றி
663 ஓம் தொன்மை வடிவமே போற்றி
664 ஓம் தொடக்கமும் முடிவும் நீயே போற்றி
665 ஓம் தொடங்கிய செயல் வெற்றிபெறச் செய்வாய் போற்றி
666 ஓம் தொடரும் வல்வினை போக்குவாய் போற்றி
667 ஓம் தொடைகளைக் காத்தருள் தெய்வமே போற்றி
668 ஓம் தோல்வியில் கலங்கா நிலையருள் போற்றி
669 ஓம் தோற்றமும் மறைவும் நீயே போற்றி
670 ஓம் தோன்றி என் முன் காட்சி நல்குவாய் போற்றி
671 ஓம் தோடி ராகத்தில் உன் புகழ் இசைப்பேன் போற்றி
672 ஓம் தோள்களை நாளும் காத்தருள் தாயே போற்றி
673 ஓம் நங்கையர்க்கு நல்லருந்துணையருள் போற்றி
674 ஓம் நங்கையற் திலகமே போற்றி
675 ஓம் நந்தா விளக்கே போற்றி
676 ஓம் நம்பி உன்னை சரணடந்தேன் போற்றி
677 ஓம் நம்பினோர் குலவிளக்கே போற்றி
678 ஓம் நர்த்தகியே நாதமே போற்றி
679 ஓம் நல்குரவு நீக்கி நலமருள் போற்றி
680 ஓம் நற்றாய் நீயே போற்றி
681 ஓம் நன்மை தீமைதனை உணரச் செய்வாய் போற்றி
682 ஓம் நன்மைகள் பல புரிவாய் போற்றி
683 ஓம் நன்னடத்தை நல்குவாய் போற்றி
684 ஓம் நன்றி பல புகல் வாய் போற்றி
685 ஓம் நடனம் ஆடி உன் புகழ் இசைப்பேன் போற்றி
686 ஓம் நயம் பட உரை செய்ய அருள்வாய் போற்றி
687 ஓம் நயனங்களால் கருணை பொழி விளக்கே போற்றி
688 ஓம் நயன ஒளி விளக்கே போற்றி
689 ஓம் நரக வாழ்வு தவிர்ப்பாய் போற்றி
690 ஓம் நரகு சேரா நிலையருள் போற்றி
691 ஓம் நரகலோக துன்பம் துடைதருள் போற்றி
692 ஓம் நலம் யாவும் நல்குவாய் போற்றி
693 ஓம் நவமணி சூட்டி மகிழ்வேன் போற்றி
694 ஓம் நவரத்தின ஒளியே போற்றி
695 ஓம் நவராத்திரி நாயகியே போற்றி
696 ஓம் நவின்றோர்க்கு இனிமை நூல் நல்கச் செய்வாய் போற்றி
697 ஓம் நளின மலர் திருவடிகள் பணிந்தேன் போற்றி
698 ஓம் நறுஞ்சுவை நீயே போற்றி
699 ஓம் நறுமண மலரே போற்றி
700 ஓம் நான் என்ற அகந்தை அளிப்பாய் போற்றி
701 ஓம் நான்மறைப் போற்றும் நற்பேறே போற்றி
702 ஓம் நாடி உன்னை சரணடைந்தேன் போற்றி
703 ஓம் நாடினோர் துயர் துடைப்பாய் போற்றி
704 ஓம் நாணயமாய் வாழ்ந்திட நவின்றிடுவாய் போற்றி
705 ஓம் நாதம் இசைத்து உன்புகழ் பாடி மகிழ்வேன் போற்றி
706 ஓம் நாதஸ்வர இசை நீயே போற்றி
707 ஓம் நாதமே இசையே போற்றி
708 ஓம் நாதனைக் காத்தருள் போற்றி
709 ஓம் நாமங்கள் பல உனக்கே போற்றி
710 ஓம் நாமகளே பூமகளே போற்றி
711 ஓம் நாயகி நான்மறையே போற்றி
712 ஓம் நாரத கானம் பாடி மகிழ்விப்பேன் போற்றி
713 ஓம் நாவலர் மணியே போற்றி
714 ஓம் நாவால் உன் புகழ் பாடி இசைப்பேன் போற்றி
715 ஓம் நாவினில் நீயிருந்து காத்தருள் போற்றி
716 ஓம் நாவினிற்குகந்த நற்பேரே போற்றி
717 ஓம் நானிலத்தோர் நலம் வாழ அருள்புரி போற்றி
718 ஓம் நானிலம் முழுதும் காத்தருள் போற்றி
719 ஒம் நானென்ற அகந்தை அழிப்பாய் போற்றி
720 ஓம் நானிலம் போற்றும் நற்ப்பேரே போற்றி
721 ஓம் நித்திய கல்யாணியே போற்றி
722 ஓம் நித்திய கடமை புரிய அருள் போற்றி
723 ஓம் நித்திய சுமங்கலியே போற்றி
724 ஓம் நித்தியமே சத்தியமே போற்றி
725 ஓம் நிந்தனை செய்வோர் மனம் மாற அருள்வாய் போற்றி
726 ஓம் நிம்மதி என்றென்றும் எமக்கருள் போற்றி
727 ஓம் நிர்மல ரூபியே போற்றி
728 ஓம் நிர்மல வாழ்வருள் போற்றி
729 ஓம் நின்நாமம் வாழ்க போற்றி
730 ஓம் நின்புகழ் பாடுவேன் போற்றி
731 ஓம் நின்பெருமை உயர்க போற்றி
732 ஓம் நிஸ்சல தத்துவமே போற்றி
733 ஓம் நிமலையே கமலையே போற்றி
734 ஓம் நியாயமாய் செயல் புரிய அருள்வாய் போற்றி
735 ஓம் நிலவே ஒளியே போற்றி
736 ஓம் நிலையான பேரருள் புரிவாய் போற்றி
737 ஓம் நிறைவருள் தருவாய் போற்றி
738 ஓம் நிறைவாழ்வு தந்தருள்வய் போற்றி
739 ஓம் நினைவெல்லாம் நீயே போற்றி
740 ஓம் நீங்கா இன்பப் பேறே போற்றி
741 ஓம் நீங்கா உன்னருள் நல்குவாய் போற்றி
742 ஓம் நீங்காமல் என்னோடு நீயிருந்தருள் போற்றி
743 ஓம் நீங்காத பேரின்ப ஊற்றே போற்றி
744 ஓம் நீள்நிலம் காற்று ஆகாயம் அனைத்திலும் நீயே போற்றி
745 ஓம் நீள் புகழ் ஆற்ற அருள்புரி போற்றி
746 ஓம் நீடுபுகழ் இசைப்பேன் போற்றி
747 ஓம் நீயிங்கு வந்தருள் போற்றி
748 ஓம் நீயே என் வாழ்வும் வழியும் எனக்கெல்லாம் போற்றி
749 ஓம் நீயே என்னுள் இருந்து என்றும் காத்தருள் போற்றி
750 ஓம் நுட்பமாக செயல் புரிய அருள்வாய் போற்றி
751 ஓம் நூதன ஒளியே போற்றி
752 ஓம் நெக்குருகி உன்னை வழிபடுவேன் போற்றி
753 ஓம் நெஞ்சமதில் குடிபுகுந்தாய் போற்றி
754 ஓம் நெஞ்சினில் நிறைபவளே போற்றி
755 ஓம் நெய்தீபம் ஏற்றி வழிபடுவேன் போற்றி
756 ஓம் நெற்றித்திலகம் நீயே போற்றி
757 ஓம் நெற்றியை நீயே காத்தருள் போற்றி
758 ஓம் நெடியவளே உன் நீடுபுகழ் இசைப்பேன் போற்றி
759 ஓம் நெடுவழியாவிலும் நீயே போற்றி
760 ஓம் நேயமுடன் வாழ அருள்புரி போற்றி
761 ஓம் நைந்துபோன என் இதயத்திற்கு ஆறுதல் நீயே போற்றி
762 ஓம் நொடிப்பொழுதும் என்னைப் பிரியாதிரு போற்றி
763 ஓம் நோய்நொடி வராமல் காத்தருள் போற்றி
764 ஓம் நோய் நொடிகளை உடனே போக்கியருள் போற்றி
765 ஓம் நோயற்ற வாழ்வருள் போற்றி
766 ஓம் நோயுற்றோர் குணமடைய அருள் செய்வாய் போற்றி
767 ஓம் நோன்புகழ் பல வேண்டிலேன் போற்றி
768 ஓம் பக்கத் துணை நீயிருப்பாய் போற்றி
769 ஓம் பச்சிளம் குழவி என்னைப் பாதுகாப்பாய் போற்றி
770 ஓம் பஞ்ச சுத்தியுடன் உன்னைப் போற்றினேன் போற்றி
771 ஒம் பஞ்சம் பசி அகற்றுவாய் போற்றி
772 ஓம் பண்ணிசைத்தே அனுதினம் உன்னைப் புகழ்வேன் போற்றி
773 ஓம் பத்தரை மாற்றுத் தங்கமே போற்றி
774 ஓம் பத்திரமாய் என்னைக் காத்தருள் போற்றி
775 ஓம் பல்லாண்டு பாடி மகிழ்வேன் போற்றி
776 ஓம் பவ்யமாய் உன்னைப் பணிவேன் போற்றி
777 ஓம் பள்ளத்தில் விழாமல் காத்தருள் போற்றி
778 ஓம் பற்களைக் காத்தருள் பரிமளையே போற்றி
779 ஓம் பசிதாகம் அகற்றிக் காத்தருள் போற்றி
780 ஓம் பசுமையே உன் நினைவு போற்றி
781 ஓம் படிக நிறத்தோய் பார்த்தருள் போற்றி
782 ஓம் படுக்கும் பாய் நீ போற்றி
783 ஓம் படுகுழியில் விழாமல் காத்தருள் போற்றி
784 ஓம் பயந்தன்னைப் போக்குவாய் போற்றி
785 ஓம் பயன் விளை செயல் புரிய அருள்வாய் போற்றி
786 ஓம் பயபக்தியுடன் உன்னைப் பணிவேன் போற்றி
787 ஓம் பரமகதி அடைந்திட அருள்வாய் போற்றி
788 ஓம் பரிதவிக்கும் என்னைக் காப்பாய் போற்றி
789 ஓம் பரிமளப் பூங்கொடியே போற்றி
790 ஓம் பல நாமங்கள் உனக்கே போற்றி
791 ஓம் பலநூறு கவிதைகள் உனக்கே போற்றி
792 ஓம் பல பாவால் உனைப்பாட அருள்வாய் போற்றி
793 ஓம் பலவாறு உன்னைப் புகழ்வேன் போற்றி
794 ஓம் பவள மணி மாலை சூட்டுவேன் போற்றி
795 ஓம் பவள மல்லி நறுமண மலரே போற்றி
796 ஓம் பவளவாய் திறந்தருள்வாய் போற்றி
797 ஓம் பழம் பெருமை கொண்டவளே போற்றி
798 ஓம் பாக்கள் பல இசைப்பேன் போற்றி
799 ஓம் பாக்கியம் பல பெற அருள்வாய் போற்றி
800 ஓம் பாண்டித்யம் பெற அருள்வாய் போற்றி
801 ஓம் பார்க்கும் இடமெல்லாம் நீயே போற்றி
802 ஓம் பார்முழுதும் எனக்கெல்லாம் நீயே போற்றி
803 ஓம் பாசம் மிகுந்த என் தெய்வாமே போற்றி
804 ஓம் பாசம் வைத்தே என்னைக் காத்தனை போற்றி
805 ஓம் பாடல் புனைய அருள் புரி போற்றி
806 ஓம் பாடி உன்னை சரணடைந்தேன் போற்றி
807 ஓம் பாதங்களைக் காப்பாய் போற்றி
808 ஓம் பாதமலர் பற்றினேன் போற்றி
809 ஓம் பாதகச் செயல் தவிர்ப்பாய் போற்றி
810 ஓம் பாதமலர் பற்றினேன் போற்றி
811 ஓம் பாமகளே பூமகளே போற்றி
812 ஓம் பாமலை சூட்டிடுவேன் போற்றி
813 ஓம் பாயசான்ன பிரியையே போற்றி
814 ஓம் பாரதத் தாய் நல் வடிவே போற்றி
815 ஓம் பாரம் பல என் பொருட்டு சுமந்தாய் போற்றி
816 ஓம் பாவங்கள் போக்குவாய் போற்றி
817 ஓம் பாவலர் மணியே போற்றி
818 ஓம் பாவையே பூவையே போற்றி
819 ஓம் பிதற்றும் மொழி கேட்டு அருள்வாய் போற்றி
820 ஓம் பிரசன்னமாகி எனக்கு அருள்வாய் போற்றி
821 ஓம் பிரதிதினம் உன்னை வழிபட அருள் செய் போற்றி
822 ஓம் பிழைக்க வழி புகல் வாய் போற்றி
823 ஓம் பீசாட்சர மந்திரம் நீய்ன் போற்றி
824 ஓம் புண்பட்ட நெஞ்சிற்கு நல் மருந்தே போற்றி
825 ஓம் புண்ணியச் செயல் புரிய அருள்வாய் போற்றி
826 ஓம் புண்ணியளே புனிதையே போற்றி
827 ஓம் புத்தியில் இருந்து காத்தருள் போற்றி
828 ஓம் புத்திர பாக்கியம் அருள்வாய் போற்றி
829 ஓம் புத்தொளிர் முகத்தவளே போற்றி
830 ஓம் புன்னகை தவழும் நிலவே போற்றி
831 ஓம் புகலிடம் உன் திருவடி போற்றி
832 ஓம் புகழ் பாடி உன்னைத் துதிப்பேன் போற்றி
833 ஓம் புகழ்மொழிகள் விரும்பாதவளே போற்றி
834 ஓம் புலமை பல பெற அருள்வாய் போற்றி
835 ஓம் புவி வாழ்வு தன்னை வேண்டிலேன் போற்றி
836 ஓம் புறமும் அகமும் நீயே போற்றி
837 ஓம் புனிதையே அருளே போற்றி
838 ஓம் பூக்கொண்டு அர்ச்சித்தேன் போற்றி
839 ஓம் பூம்பொழில் சோலை நீயே போற்றி
840 ஓம் பூமகளே பாமகளே போற்றி
841 ஓம் பூமித்தாய் நல் வடிவே போற்றி
842 ஓம் பூரிப்பேன் உன் புகழ் பாடும் காலை போற்றி
843 ஓம் பூலோகம் யாவும் நீயே போற்றி
844 ஓம் பூவிலும் மென்மையானவளே போற்றி
845 ஓம் பூஜைகள் பல உனக்கே போற்றி
846 ஓம் பெட்டகமே பொக்கிஷமே போற்றி
847 ஓம் பெற்ற தாய் நீயன்றோ போற்றி
848 ஓம் பேசும் சக்தியருள் போற்றி
849 ஓம் பேசும் மொழி நீயே போற்றி
850 ஓம் பேணி என்னை தினம் காத்தாய் போற்றி
852 ஓம் பேர் ஆயிரம் பெற்றவளே போற்றி
853 ஓம் பேரின்ப வீடுபேரருள்வாய் போற்றி
854 ஓம் பேரும் புகழும் பெற அருள்வாய் போற்றி
855 ஓம் பைந்தமிழ் பாவால் போற்றுவேன் போற்றி
856 ஓம் பைந்தொடி நீ என்னைக் காப்பாய் போற்றி
857 ஓம் பைம்பொழில் சோலை மலர் நீயே போற்றி
858 ஓம் பைரவி ராக இசைப் பிரியையே போற்றி
859 ஓம் பொக்கிஷமாய் என் மனதுள் உன்னை வைத்தேன் போற்றி
860 ஓம் பொல்லா குணம் போக்கிடுவாய் போற்றி
861 ஓம் பொற்பதங்கள் சரணடைந்தேன் போற்றி
862 ஓம் பொற்றாமரை வடிவினளே போற்றி
863 ஓம் பொன்மணியே கண்மணியே போற்றி
864 ஓம் பொறையுடைமை கொண்டவளே போற்றி
865 ஓம் போகசுகம் வேண்டிலேன் போற்றி
866 ஓம் போராடும் வாழ்வின் உறுதுணையே போற்றி
867 ஓம் மக்களைக் காத்தருள் போற்றி
868 ஓம் மங்கல வாழ்வினைத் தந்தருள்வாய் போற்றி
869 ஓம் மங்கள வடிவாம்பிகையே போற்றி
870 ஓம் மங்களமே என் நாளும் நல்குவாய் போற்றி
871 ஓம் மங்கையர்த் திலகமே போற்றி
872 ஓம் மங்காத செல்வமே போற்றி
873 ஓம் மங்காத பேரெழிலே போற்றி
874 ஓம் மத்யமாவதி ராகம் இசைத்து இசைபாடிமகிழ்வேன் போற்றி
875 ஓம் மகளென்னைக் காப்பாய் போற்றி
876 ஓம் மடமை அகற்றுவாய் போற்றி
877 ஓம் மணமாக கன்னியர்க்கு நல் அருந்துணைத் தருவாய் போற்றி
878 ஓம் மணமிக்க நறுமண மலரே போற்றி
879 ஓம் மண வாழ்வினைக் காத்தருள் போற்றி
880 ஓம் மணாளனைக் காத்தருள் போற்றி
881 ஓம் மணியோசை நீயே போற்றி
882 ஓம் மதிநுட்பம் நல்கிடுவாய் போற்றி
883 ஓம் மயக்கம் தீர அருள்வாய் போற்றி
884 ஓம் மயங்கா நிலையருள் மாதா போற்றி
885 ஓம் மரகத வடிவமே போற்றி
886 ஓம் மலர்விழித் திறந்தருள்வாய் போற்றி
887 ஓம் மலரடி பணிந்திடுவேன் போற்றி
888 ஓம் மறவாநிலையருள் மாதா போற்றி
889 ஓம் மனம் கனிந் தருளும் பேறே போற்றி
890 ஓம் மன இருள் மாய்த்திடுவாய் போற்றி
891 ஓம் மனதார உனைப் பணிந்தேன் போற்றி
892 ஓம் மனதார உனைப் பணிவோர் தம்மைக் காத்தருள் போற்றி
893 ஓம் மனமாசை அகற்றுவாய் போற்றி
894 ஓம் மாங்கல்ய பாக்கியமருள் மாதாவே போற்றி
895 ஓம் மார்க்கமே எனக்கு நீயே போற்றி
896 ஓம் மார்பை முன்னின்று காப்பாய் போற்றி
897 ஓம் மாசிலாமணியே போற்றி
898 ஓம் மாணிக்க வீணையின் இன் இசையே போற்றி
899 ஓம் மாதரசி மாணிக்க ஒளி நீயே போற்றி
900 ஓம் மாதா நீயே வருவாய் போற்றி
901 ஓம் மாதா பவானியே போற்றி
902 ஓம் மாதேள்வரியே போற்றி
903 ஓம் மாமலரில் வீற்றிருப்பாய் போற்றி
904 ஓம் மாமனைக் காத்தருள் மாதா போற்றி
905 ஓம் மாயா இருள் தவிர்ப்பாய் போற்றி
906 ஓம் மாயா இவ்வுலகின் துணை நீயே போற்றி
907 ஓம் மாயா மாளவ கௌளை ராகம் பாடி உன் புகழ் இசைப்பேன் போற்றி
908 ஓம் மாலை ஒளிர் தீபமே போற்றி
909 ஓம் மாலை மதி நீயே போற்றி
910 ஓம் மாறாத பேரன்புடையாளே போற்றி
911 ஓம் மானகரக் காவல் தெய்வமே போற்றி
912 ஓம் மானிடர் துயர் துடைப்பாய் போற்றி
913 ஓம் மாநிடர் போற்றும் பேரெழிலே போற்றி
914 ஓம் முக்கனி சுவையே போற்றி
915 ஓம் முத்தமிழ் தெய்வமே போற்றி
916 ஓம் முக்தி பெற அருள்வாய் போற்றி
917 ஓம் முப்பொழுதும் தொழுவேன் போற்றி
918 ஓம் மும்மலம் போக்குவாய் போற்றி
919 ஓம் முல்லை மலர் பாதம் என் துணையே போற்றி
920 ஓம் முற்றத்தின் காவலும் நீயே போற்றி
921 ஓம் முன்னின்று காப்பாய் போற்றி
922 ஓம் முன்னும் பின்னும் நீயே போற்றி
923 ஓ முன்னைப் பழம் பொருளே போற்றி
924 ஓம் முகத்தினைக் காப்பாய் போற்றி
925 ஓம் முடக்கு வாதம் போக்குவாய் போற்றி
926 ஓம் முடங்கிய செயல் நடைபெற அருள்வாய் போற்றி
927 ஓம் முடவரை குணமாக்குவாய் போற்றி
928 ஓம் முதல் வணக்கம் உனக்கே போற்றி
929 ஓம் முதலும் முடிவும் நீயே போற்றி
930 ஓம் முதுகினைக் காத்தருள் தாயே போற்றி
931 ஓம் முயன்றால் துணைவருவாய் போற்றி
932 ஓம் முழ்ங்கால்கள் தன்னை முதல்வியே காத்தருள் போற்றி
933 ஓம் மூக்கினைக் காப்பாய் போற்றி
934 ஓம் மூர்க்க குணமதை அழிப்பாய் போற்றி
935 ஓம் மூலமும் முதலும் நீயே போற்றி
936 ஓம் மூலாதார ஒளியே போற்றி
937 ஓம் மூவடிவ சக்தியே போற்றி
938 ஓம் மூவுலகமும் நீயே போற்றி
939 ஓம் மெத்தவே உந்தனைப் போற்றினேன் போற்றி
940 ஓம் மெய்மயக்கம் தவிர்ப்பாய் போற்றி
941 ஓம் மெய்மை மொழி புகல்வாய் போற்றி
942 ஓம் மெல்லியே போற்றி
943 ஓம் மென்மை உள்ளம் கொண்டவளே போற்றி
944 ஓம் மேன்மை பெற அருள்வாய் போற்றி
945 ஓம் மேன்மை பொருந்தியவளே போற்றி
946 ஓம் மேதகு செயல் புரிய அருள்வாய் போற்றி
947 ஓம் மேதினியோர் தம்மைக் காப்பாய் போற்றி
948 ஓம் மேதினியோர் புகழும் பேரெழிலே போற்றி
949 ஓம் மையல் தன்னைப் போக்கிடுவாய் போற்றி
950 ஓம் மையிருள் தன்னில் காப்பாய் போற்றி
951 ஓம் மொட்டும் மலரும் நீயே போற்றி
952 ஓம் மோகம் தவிர்த்த்தெம்மைக் காப்பாய் போற்றி
953 ஓம் மோகனப் புன்னகை புரிவாய் போற்றி
954 ஓம் மோதகம் தந்திடுவேன் போற்றி
955 ஓம் மோனமே தவமே போற்றி
956 ஓம் வந்த கடன் உடனே போக்கியருள் போற்றி
957 ஓம் வந்தென்னை செய்துன்னை வழிபடுவேன் போற்றி
958 ஓம் வந்தென்னை தினம் காப்பாய் போற்றி
959 ஓம் வடிவாம்பிகையே போற்றி
960 ஓம் வணக்கம் பல உனக்கம்மா போற்றி
961 ஓம் வணங்காத்தலை வணங்க வைப்பாய் போற்றி
962 ஓம் வயிற்றினைக் காத்தருள் வடிவே போற்றி
963 ஓம் வரமது நல்கும் பேறே போற்றி
964 ஓம் வரவேண்டும் கண்ணெதிரே போற்றி
965 ஓம் வருவாய் வந்தருள் தருவாய் போற்றி
966 ஓம் வாக்கினில் நீயிருந்து காப்பாய் போற்றி
967 ஓம் வாழ்வாங்கு வாழ அருள்புரிவாய் போற்றி
968 ஓம் வாழ்வெனக்கு நீயே போற்றி
969 ஓம் வான்புகழ் கொண்டனை நீயே போற்றி
970 ஓம் வாரணங்கள் ஆயிரம் உன்னைப் போற்றி துதி செய்யும் போற்றி
971 ஓம் வாராக்கடன் வருவிப்பாய் போற்றி
972 ஓம் விட்டிடேன் உன்பாதம் போற்றி
973 ஓம் வித்தை பல புரிய அருள்வாய் போற்றி
974 ஓம் விதையாய் நல் மரமாய் ஆனாய் போற்றி
975 ஓம் வியத்தகு செயல் புரிய அருள்வாய் போற்றி
976 ஓம் விளக்கமே விடையே போற்றி
977 ஓம் விளங்கா செயல் (தடைப் பட்ட செயல்) விளங்க வைப்பாய் போற்றி
978 ஓம் விளங்கொண்ணாப் பேரெழிலே போற்றி
979 ஓம் வீட்டின் ஒளிவிளக்கே போற்றி
980 ஓம் வீடுதோறும் நீயிருந்து காத்தருள் போற்றி
981 ஓம் வீடுபேரருள்வாய் போற்றி
982 ஓம் வீண் எண்ணம் மாய்ப்பாய் போற்றி
983 ஓம் வீணையே இசையே போற்றி
984 ஓம் வீரவாழ்வு வாழ அருள்வாய் போற்றி
985 ஓம் வூடுருவும் ஒளிவிளக்கே போற்றி
986 ஓம் வெம்மைக் கொடுமை தவிர்ப்பாய் போற்றி
987 ஓம் வெற்பு நோய் போக்கிடுவாய் போற்றி
988 ஓம் வெற்றி எதிலும் நல்குவாய் போற்றி
989 ஓம் வெற்றித் திலகம் இடுவாய் போற்றி
990 ஓம் வேண்டப் படும் பொருளும் நீயே போற்றி
991 ஓம் வேண்டாத எண்ணங்களை அகற்றுவாய் போற்றி
992 ஓம் வேண்டாத செயல்களைத் தவிர்க்க அருள் போற்றி
993 ஓம் வேண்டிப் பணியாத நாளில்லையே போற்றி
994 ஓம் வேண்டிலேன் பிரிதொன்றை எப்பொழுதுமே போற்றி
995 ஓம் வேண்டுகோளுக்கு செவிமடுப்பாய் போற்றி
996 ஓம் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவளே போற்றி
997 ஓம் வேண்டுதலை நிறைவேற்றுபவளே போற்றி
998 ஓம் வேண்டுபவள் நீயே போற்றி
999 ஓம் வேண்டும் அடியார் துயர் தீர்த்தருள் போற்றி
1000 ஓம் வேண்டும் வரங்கள் தருவாய் போற்றி
1001 ஓம் வேண்டும் வேண்டும் எனக்கு என்றும் நீயே போற்றி
1002 ஓம் வேண்டுவேன் என்றுமே உன் அருள் மட்டுமே போற்றி
1003 ஓம் வேண்டுவேன் உன் மலரடி பணிதலையே போற்றி
1004 ஓம் வேண்டுவோர் வேண்டும் வரமதை நல்குவாய் போற்றி
1005 ஓம் வேள்விகள் பல உனக்கே போற்றி
1006 ஓம் வேதனைத் துடைதெம்மைக் காத்தருள் போற்றி
1007 ஓம் வையத்தோரை வாழவைப்பாய் போற்றி
1008 ஓம் வையம் உள்ளவரை உன்புகழ் நிலைக்கும் போற்றி போற்றி

மேற்கூறிய இந்த வழிபாட்டினைப் படிப்பவர், பார்ப்பவர், கேட்பவர், நினைப்பவர் அனைவரும் வாழ்வில் சகல நலன்களும், சகல சௌபாகியங்களும் பெற்று உய்வர் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
அன்புடன் விஜயலஷ்மி,
தமிழாசிரியை, கோவை 22

எழுதியவர் : ஸ்ரீ விஜயலக்ஷ்மி (11-May-18, 10:31 am)
Tanglish : amma
பார்வை : 999

மேலே