உன்னால் விடியட்டும்

தகப்பனின்
கனவை நிஜமாக்க வந்தாயா ?
தாயின் மனதை
குளிர்விக்க வந்தாயா ?
உறவுகளுக்கு
உதவிட வந்தாயா ?

நாளைய உலகை
புதிதாய் செய்திடும்
புரட்சியாளன் ஆவாயா ?
தமிழன்
தலை நிமிந்து நடக்கும்படி
தானை தலைவன் ஆவாயா ?


மனிதம் உணர்ந்து
கருணை கொண்டு
உயிர்களை காப்பாயா ?


தமிழை
போற்றி வளர்ப்பயா ?
அரசு பள்ளியில்
படிப்பாயா ?
ஹிந்தி திணிப்பை
ஏற்ப்பாயா ?
ஆங்கிலமே
அறிவு என்பாயா ?
நீட்டை
எதிர் கொள்வாயா ?
விவசாயம்
விஞ்சானம்
இரண்டும் பயில்வாயா ?
அரசியல்
ஆர்வம் கொள்வாயா ?


சினிமா பார்த்து
சீர் கெட்டு
ரசிகனாக அலைவாயா ?
கிரிக்கெட்
பைத்தியமாய்
கிறங்கி கிடப்பாயா ?


காதல்,போதையில்
சுகம் கண்டு
சுருங்கி விடுவாயா ?


எது எப்படியானாலும்
எதிர்கால இந்தியாவின்
நம்பிக்கை நீதான்


வளர்ந்து
விளையாடி
அறம் கற்று
கடலாய் ஆர்ப்பரித்து
சூரியானாய்
எழுந்துவா
இது உன் நாடு
உன்னால் விடியட்டும் .

எழுதியவர் : பந்தளம் ( ரமேஷ் பாபு ) (12-May-18, 9:35 am)
சேர்த்தது : பந்தளம்
Tanglish : unnaal vidiyattum
பார்வை : 103

மேலே