மலராதிருங்கள்

மொட்டுக்களே
கொஞ்சம் பொறுத்திருங்கள்
மலர்ந்து விடாதீர்கள் ......
.
இன்னமும் மாலையில் சேராத
மலர்ந்து விரிந்த மலர்களுண்டு....
.
மொட்டுக்களே
கொஞ்சம் பொறுத்திருங்கள்
மலர்ந்து விடாதீர்கள் ....


- பெண்ணைப் பெற்ற தாயின் கதறல்

எழுதியவர் : கீர்த்தி (12-May-18, 9:26 am)
சேர்த்தது : கீர்த்தி
பார்வை : 50

மேலே