உயர்ந்தவன் எவனுமில்லை
கரங்களை நீட்டி
கடற்கரையில் நின்று ரசித்திருந்தேன்
உயர்ந்திருக்கிறோம்
விழமாட்டோம் என்றிருந்தேன்
அறியா வேளையில்
காலின் கீழிருக்கும் மண்ணை
இழுத்துச் சென்று
என் உயரத்தைக் குறைத்து
உயர்ந்தவன் எவனுமில்லை
எனக் காட்டினாய்