செவிலித்தாய்

என் தாயின் கருவறையிலிருந்து
நான் வெளியே வர
என் தாயோடு போராடியவள் ....

என் மீது படர்ந்த
முதல் ஸ்பரிசம் உன்னுடையது ....

என்னைத் தீண்டிய
முதல் சுவாசம் உன்னுடையது ....

என்னை மார்போடு
முதலில் அணைத்தவள் நீ .....

என்னை முதலில் சுத்தம்
செய்தவள் நீ ....

நான் நோய் கொண்டு வந்தால்
முகம் சுளிக்காமல்
என்னைப் பராமரிப்பவள் நீ ...

எல்லாவற்றிலும் என் தாய்க்கு
முந்தி கொண்டவள் நீ ....

உன்னுடைய உண்மையான
புனிதமான சேவை போற்றத்தக்கது ...

செவிலியர் தின நல்வாழ்த்துக்கள்

எழுதியவர் : கீர்த்தி (12-May-18, 11:47 am)
சேர்த்தது : கீர்த்தி
பார்வை : 47

மேலே