சொல்ல நினைக்கும் கதை 4

மதியும் அரசும் சந்திக்க மௌனம் நீடித்தது.விரல்களை பிசைந்து பயம் என நினைத்து பாதி வார்த்தைகள் வாய் உள்ளேயும் மீதி வெளியேவும்
காதலனையாய் சந்திக்கும் முதல் சந்திப்பு பயந்து பயந்து எப்படி இருக்க? நல்லா இருக்கியா??
என்ன பண்றீங்க??ம்அஅ அப்புறம் என்ன???
அப்பப்பா இந்த வார்த்தை பேச அவள் நெளிந்து கொண்டே கேட்க
அவனும் ம்அஅ பதில் சொல்ல...
பொது இடத்தில் யாராவது பார்க்க போறாங்க ........என மதியின் பயத்தை ஏற்று அரசு ஒரு சில வார்த்தைகள் பேசி கிளம்பினான்.
அவனை பார்த்ததும் அடையாளம் தெரியாதவாறு மாறி இருந்தான்.
மீசை,தாடி, முகத்தில் மாற்றம் குரலில் மாற்றம்.பல வித பல வித
மாற்றங்கள்.

அவளுக்கு அவனை தான் பார்த்தோம் என நம்பவே இல்லை.
கனவோ,கற்பனையோ மெல்ல மெல்லத் அவனை ரசிக்க தொடங்கினாள்.அவனின் கன்னங்களை கிள்ளி முத்தம் தராமல் போய்டோமே..என அவனை நேரில் பார்த்ததை உறுதி செய்யாமல் போய்டோமே........
என் அருகில் அவன் அவனை பார்த்து எத்தனை காலங்கள் எத்தனை நாட்கள் ஓடி போனது.
மதி நினைவில் முழுக்க நினைத்ததும் கைபேசி சின்னுகியது.
அரசிடம் இருந்து தான் அந்த கால்
என்ன ஒன்னுமே பேசாம போய்ட உனக்காக தானே வந்தேன்.
உன்ன பார்க்கனும் தான் வந்தேன்.
இப்படி பண்ணீட. பேசவே இல்லை
என்ன ஆச்சு? அவளுக்கு சொல்ல தெரியல சொல்லியும் சொல்லாமம ம்அஅ அமைதியா இருந்தா.
அப்புறம் அவ தொடங்கினாள்???
என்ன விட்டு விட மாட்டை ஏமாற்ற
மாட்டல???
உனக்காக தான் என் வாழ்க்கை
நீ இல்லை னா நானும் இல்லை.
நினைவு தெரிந்த நாள் முதல் உன்னை மட்டும்தான் நேசிக்குறேன்
என் வாழ்வில் சுகமோ,துக்கமோ உன்னோடு மட்டும் தான் என் மதியின் கேள்விகளுக்கு அரசு நிதானமாக உனக்காக மட்டும் தான் நான் இருக்கிறேன் டி மறந்துடாத...
என் நினைவுகள் என் மனைவி நீ தான்.கண்களில் இருக்கும் கண்ணீர் துளிகளை துடைச்சுகோ.....
உன் கண்கள் கலங்க கூடாது எப்பொழுதும்....
நீயே என்ன வெறுத்தாலும் நான் உன்னை விட மாட்டேன் என அரசு சமாதானம் செய்தார்...

எழுதியவர் : உமா மணி படைப்பு (12-May-18, 11:24 pm)
பார்வை : 142

மேலே