நண்பனே நிலையான சுமை ...!
ஐந்து நொடி ஆசையில்
அன்பை சுமந்தவள்
பலனாய் ஈரைந்து மாதம்
என்னை சுமந்து விட்டுவிட்டபின்
கண்ணிற்கு கண்ணாய்
மண்ணை சுமந்து பின்
மாதங்களை சுமந்து
கண்ணனாய் காதலை சுமந்து
மன்னனாய் மாலை சூடிய
நண்பனை சுமந்த இதயத்தில்
துடிப்புகள் மறந்து
துளையிட்ட பூமிக்கு
ஆறடி அங்கம் சுமக்கும்
போது தங்கமாய் கை
கோர்க்கும் நண்பனின்
சுமையே நிலையான சுமை ....!