ஆசைகள்
இயற்கையை ரசிக்க ஆசை
மௌனத்தில் பேச ஆசை
இசைக்கு இசை போட ஆசை
நாட்டியத்திற்கு நடனம் சொல்லித்தர ஆசை
அருவியின் அழகை காண ஆசை
பூவுக்கு பூக்க சொல்லித்தர ஆசை
நடந்து வரும் பாதையில் தடம்பதிக்க ஆசை
மனதுக்குள் மறக்க முடியாத
நினைவாய் இருக்க ஆசை
இசை பாடும் குயிலுக்கு
பாட்டு படிக்க ஆசை
என் தந்தைக்கு பிடித்த
மகளாய் இருக்க ஆசை
உறவுக்கு
உண்மையாய் இருக்க ஆசை
தங்கைக்கு
நல்ல தோழியாய் இருக்க ஆசை
அன்புக்கு
அடிமையாய் இருக்க ஆசை
அறிவுக்கு
அழகாய் இருக்க ஆசை
என் தாய்க்கு விடை பிரியாத
உயிராய் இருக்க ஆசை
அண்ணனுக்கு
நல்ல தோழானாய் இருக்க ஆசை
தம்பிக்கு
தாயாய் இருக்க ஆசை
ஆசையோ ஆசை
பேராசை
ஆசை கொள்வது மட்டும்தான்
மனிதரின் ஆசை!!!!!!