நான்
நான்
அவர்
பேசுவது சரியில்லை !
செயல்கள் கூட பிடிப்பதில்லை !
உள்ளத்தில் !
பொங்கி வரும் கோபம்
கொதி நிலையில் இரத்தம்
நீங்கள் செய்வது
சரியில்லை சொல்லி விட
வார்த்தை வருமுன்
புன்னகையை முகத்தில் காட்டி
முடிவுரையை வாசிக்கிறேன்
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் !
நான்
யதார்த்தவாதி ? காரியவாதி ?
இல்லை
நான் சுடுகாட்டு காவலன்
எண்ணங்களை மனதுக்குள்
புதைத்து விடுவதால் !