நம்பிக்கைத் துரோகம்

பிள்ளைகளின் நம்பிக்கைத் துரோகம் பெற்றோர்களையும்,
பெற்றோர்களின் நம்பிக்கைத் துரோகம் பிள்ளைகளையும் பாதிக்க, நம்பிக்கைத் துரோகமில்லாத உலகம் தேடிகிறேன் நான்.

அன்பை ஆராதிக்காத ஆணவத்தில் ஆடும் ஆடம்பரக்கூட்டம் நிரம்பிய உலகில் நம்பிக்கைத் துரோகம் இயல்பாகிவிட்டது.
போட்டியும், பொறாமையும் இயல்பாகிவிட்டது.
ஆபத்தான ஆபாசம் இயல்பாகிவிட்டது.

திருந்தாத ஜென்மங்கள் இவை,
கொடுக்கும் குரல்கள் வெறும் அடையாளங்கள்.
ஆணவத்தின் அடையாளங்கள்.
அகம்பாவத்தின் அடையாளங்கள்.
பணத்திமிரு, அதிகாரத்தின் அடையாளங்கள்.

இல்லை,
இங்கே உண்மையாக போராடுவோரும் உண்டு.
அப்படியெனில் ஏன்டா மாறவில்லை?
இந்த மனிதர்களின் மனங்களும் மாறவில்லை.
குணங்களும் மாறவில்லை.
ஏனென்று உன்னால் பதில் சொல்ல முடியுமாடா?

சிந்திய இரத்தங்கள் அமைதியான வாழ்க்கைக்காக சிந்தப்பட்டதா?
பிரபலமானவர்கள் சொன்னால் என்ன சொல்கிறார்கள் என்று யொசித்துக் கூட பார்க்க மாட்டீர்களா?

நடிகர்களுக்குச் சங்கம் வைத்து அடித்துக் கொள்ளும் நபர்களுக்குச் சிந்திக்கும் திறன் இருக்கவா போகிறது?
இல்லாததால் தானே அடிமைகளாக தன்னை இழந்து வாழ்கிறார்கள் இவர்கள்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (14-May-18, 10:49 pm)
Tanglish : nambikkaith throgam
பார்வை : 11748

மேலே