இனிப்பு அழகி
இனிப்புகளிலேயே
நீ
பெரிய
புதுவித இனிப்பு..
நெஞ்சில் கரைந்து. இனிக்கிறாய்..
பார்வையில் கரைந்து
இனிக்கிறாய்...
கைகளில் கரைந்து
இனிக்கிறாய்..
இதழ்களில் கரைந்து
இனிக்கிறாய்...
உறவில் கரைந்து
இனிக்கிறாய்..
மீண்டும் கண்ணெதிரே
அதே பெரிய.. புதுவித...
இனிப்பாகச் சிரிக்கிறாய்..
என் இனிப்பு அழகி!