புதையல் 4

கோவில் திருவிழா முடிந்தது.சிங்காரத்தின் பேரன்கள்
புதையலை தேடி சென்றனர்.அவர்கள் தங்களுக்கு தேவையான உணவுகள், பாதுகாப்பு பொருட்கள், துணிகள் எடுத்து கொண்டனர்‌. தனி தனியாக புதையலை தேடி சென்றனர்.கோவில் திருவிழா முடிந்த நிலையில் தாத்தா சிங்காரம் சொன்னது போல கோவிலை ஒரு சுற்று சுற்றி அதன் அடுத்த குறிப்பான இரு மையில் தூரம் சென்று நடந்தனர்.
இரு மையில் நடந்ததும் தன் பசியை கட்டுப்படுத்தாமல் கொண்டு வந்த உணவை சாப்பிட்டனர்.
அதை அடுத்து நதி நடக்க நடக்க பொழுது போனது.அந்த நதியின் ஓரத்தில் மூத்த பேரன் டென்ட் போட்டு இரவை கழிக்க யோசித்தான்.
இரண்டாவது பேரன் கொஞ்சம் பேராசை அதிகம் அனைவருக்கும் முன் முதலில் நாம் புதையலை எடுத்து விட வேண்டும் என வேகமாக வந்து இவர்கள் இருவரையும் அடுத்து காட்டு பகுதியை அடைந்தான்.
காட்டு பகுதியில் யாரும் இல்லை தனிமையில் அவன் திக் திக் திக் என பயங்கரமான இடம் விலங்குகள் நடமாடும் இடம் என ஊர் மக்கள் சொல்லி கேள்வி பட்டிருக்கிறான்.
பதற்றமான சூழ்நிலை ஆந்தை அவள் நாய்கள் ஊளை இட இருட்டில் ஒன்றும் புரியவில்லை.உதவிக்கு யாரும் இல்லை.புலி வருமோ,சிங்கம்
வருமோ என நினைத்து நினைத்து அலறினான்.
பின் ஒரு சில குச்சி கட்டைகள் வைத்து தீ மூட்டினாய்.
இரவின் மடியில் தூக்கம் தொலைத்து விழித்து கொண்டே இருந்தார்

எழுதியவர் : உமா மணி படைப்பு (15-May-18, 10:35 pm)
சேர்த்தது : உமா
பார்வை : 86

மேலே